தரிசனம்

தரிசனம், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 88, விலை 75ரூ.

மலைமேல் பயணம் செய்ய வேண்டும். பயணத்தை எங்கிருந்து தொடங்குவது சிஷ்யன் கேட்டான். ஞானி சொன்னால் மலை உச்சியிலிருந்து தொடங்கு என்று. பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்த உடனேயே, இந்நேரம் நீ மலை உச்சியில் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் ஞானிகளின் எண்ண தரிசனம். ஆழ்மனத்திற்குள் புதைந்திருக்கும் அந்த அனுபூதி தன்மையை தரிசிக்க முடிந்தவர்களுக்கு இது எளிது என்கிறார்கள் ஞானிகள். இறையன்பும் அப்படித்தான் பேரண்டத்தைக் காட்டிலும் பிரம்மாண்டம் கொண்டது ஆழ்மனம் என்பதை அறிகிறபோதே தேடல் தொடங்குவதாக அவர் கூறுவது நிதர்சனம். பார்த்த, பார்க்கும் அனைத்தும் ஞானிதான். தரிசனம்தான். அதாவது நம்மை நாமே உணர்ந்து கொள்ள வைக்கிறார் இறையன்பு. நன்றி: குமுதம், 30/10/2013.  

—-

 

ஓய்வுக்குப் பிறகும் உற்சாக வாழ்க்கை, மன்னார்குடி பானுகுமார், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் 641001, விலை 155ரூ.

பணியில் இருந்து ஓய்வு பெற்று தனிமையில் வாழ்பவர்களுக்கும், 60 வயதை கடந்த பின் இனி என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு இருப்பவர்களுக்கும் நல்ல வழிகாட்டி. முதுமையான காலத்தை எப்படி இனிமையாக ஆக்கிக்கொள்வது என்ற பயனுள்ள தகவல் கொண்ட இந்த புத்தகம் அனைவர் கையிலும் இருப்பது அவசியம். நன்றி: தினத்தந்தி, 16/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *