பெயல் மணக்கும் பொழுது
பெயல் மணக்கும் பொழுது, அ. மங்கை, மாற்று.
தமிழில் வெளிவந்துள்ள பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பில் மிக முக்கியமான தொகுப்பாக பெயல் மணக்கும்பொழுது அமைந்துள்ளது. ஈழ பெண் படைப்பாளிகளின் இலக்கிய பதிவுகள், முடிவுறாத போராட்டமாக தொடரும் பல நிலைப்பாடுகளையும் உணர்த்துவதாக உள்ள, இந்த தொகுப்பை அ. மங்கை தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழ தமிழர்களின் வாழ்வில், பல முக்கியமான மாற்றங்களும், சிதறல்களும், அலைவுகளும் இந்த காலகட்டத்தில் இடம்பெற்றுவிட்டன. 93 கவிஞர்களின் கவிதைகள், சிக்கலான பல்வேறுமுகங்களுடைய அவலங்கள் நிறைந்த, ஈழ வாழ்வை பாடுகின்றன. இந்த தொகுப்பிற்கு வ. கீதா எழுதியுள்ள சிறப்பான பின்னுரை கருத்தியல் சார்ந்த முக்கியத்துவம் உடையது. இந்த கவிதை நூல் உலக தமிழாய்ச்சி நிறுவனத்தில் வாசிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 22/9/2013.
—-
ஆயிரம் ஹைக்கூ, கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், பக். 184, விலை 100ரூ
புற்றீசல் போல் ஹைக்கூ கவிதைகள் பல வந்தாலும் இந்த குறுங்கவிதைக்கு ஒரு தனியிடம் உண்டு. இது இவரது 12வது நூல். ஆனால் புதிய சிந்தனை, புதிய பார்வையில் கவிதைகள் பிறந்திருக்கின்றன. தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா ஆங்கில கையொப்பம் ஏனடா என்ற கவிதை, தமிழ் உணர்வை ஊட்டுகிறது. கணினி யுகத்தின் கற்கண்டு ஹைக்கூ என்று கவிஞர் கூறுவது, இந்த நூலுக்கு முற்றிலும் பொருந்தும். -ஜி.வி.ஆர். நன்றி: தினமலர், 22/9/2013.