சிறுவருக்கு மகாபாரதம்
சிறுவருக்கு மகாபாரதம், பழனியப்பா பிரதர்ஸ், விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-146-0.html
மகாபாரதம் மகா சமுத்திரம் போன்றது. இதில் உள்ள கதைகளை, எளிய தமிழ் நடையில் அழகாக வடித்திருக்கின்றனர். பகாசுரன் கதை, அபிமன்யூ வீரம் ஆகியவை உட்பட, 170 சம்பவங்கள் கதைகளாக வண்ணப்படத்துடன் அமைந்திருக்கின்றன.
—-
சிந்தனைத் துளிகளும் சின்னச் சின்னக் கதைகளும், கு.வெ. பாலசுப்பிரமணியன், விலை 45ரூ.
சிறந்த கருத்துக்களை எளிதாக படிக்க வசதியாக எழுதப்பட்ட நூல். நூற்றாண்டு கால வழியும் இதில் உள்ள தகவலில் அடக்கம்.
—-
கண்ட நாள் முதலாய் கவிதைத் தொகுப்பு, கார்த்திகேயன், ஆர்.ஐ. பப்ளிகேஷன்ஸ், 69, நியூ ஆவடி ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை 600010, விலை 75ரூ.
பல்வேறு தளங்களில், பார்வையைச் செலுத்தி கவிதை எழுதும் கார்த்திகேயன் படைப்பு இது. அவரது கல்லூரி நாட்களில் அவரது உள்ளூறிய கருத்துக்கள் சிறப்பாக உள்ளன. சுற்றத்தார் அனைவரையும், சமூக அக்கறைகொண்ட மாணவர்களையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
—-
வரலாறாய் வாழ்ந்தவர்கள், வெற்றித் தமிழன், நீர் வெளியீடு, பக். 256, விலை 175ரூ.
தங்களின் சீரிய சிந்தனையால் சிறந்த புலமையால், ஆளுமைத் திறனால் தமிழ் நாட்டின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் தங்கள் திறமைகளையும் உழைப்பையும் அர்ப்பணித்த பெருமக்கள் எவ்வளவோபேர். தமிழ் நாட்டின் வரலாறுடன் இவர்களின் வரலாறும் பின்னிப் பிணைந்தே இருக்கும். அப்படிப்பட்டவர்களால் ஐம்பத்து ஏழு வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை பல்வேறு அறிஞர்கள் கொண்டு எழுத வைத்து அவற்றைத் தொகுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். நல்ல முயற்சி. -மயிலை சிவா. நன்றி; தினமலர், 12/10/2013.