நானே எழுதுவேன் என் அழகிய தமிழை

நானே எழுதுவேன் என் அழகிய தமிழை, இரா. மணிகண்டன், த. விஜயபாஸ்கர், குணவர்சினி பதிப்பகம், 41, பாரதி கூதி, கதிர்காமம், புதுச்சேரி 605009.

தமிழ் எழுத்துக்களை அழகாக குண்டு குண்டாக எழுதுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவே. எழுத்துக்களை எப்படி அழகாக எழுதுவது என்பதை மாணவர்களுக்குக் கற்றுத்தரும் விதத்தில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. பாராட்டத்தக்க முயற்சி.  

—-

 

ஐக்கூ உலகில் ஆலந்தூர் மோகனரங்கன், புலவர் குடந்தை பாலு, சாரதி மாணிக்கம் பதிப்பகம், 10, பழண்டியம்மன் கோவில் தெரு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 150ரூ.

நாடும் மொழியும் முன்னேறிவரும் சூழலில் ஆற்றல் மிக்கவர்களின் வாழ்க்கை குறிப்பும், படைப்புத்திறனும் வெளிவரவேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். அப்போதுதான் இலக்கியமும் வளரும். இதை கருத்தில் கொண்டு இருநூற்றுக்கும் மேற்பட்ட ஐக்கூ கவிதை படைப்பாளர்களைப் பற்றி ஆராய்ந்து, ஆலந்தூர் மோகனரங்கன் ஐக்கூ கவிதைத் துறையில் செய்துள்ள சாதனைகளை வியக்கிறார் ஆசிரியர்.  

—-

 

குரு தேவரின் திருவடி நிழலில், குருபக்திமாலா, 1, கச்சேரி சாலை, மைலாப்பூர், சென்னை 4, விலை 50ரூ.

சக மனிதர்களை எதிர்பார்க்காமல் நூறு சதவீதம் இறைவனை நம்பும் ஒருவருக்கு, ஏதாவது ஒரு மனிதர் மூலமாக மனஆறுதல், உதவிகள் கிடைக்கும். இது ஆன்மீக உண்மை. இதில் நூலாசிரியர் ஆர்.சீனிவாசமூர்த்திக்கு இறைதூதராக கிடைத்தவர் மைசூர் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள். கொண்ட மாறாத நம்பிக்கையால் நூலாசிரியரின் மனம், உடல் சிரமங்களை இவர் சொல்லாமலேயே சுவாமிகள் மூலமாக நீங்கிய அதிசய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நன்றி:தினத்தந்தி, 31/7/2013,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *