தோட்டக்காட்டீ

தோட்டக்காட்டீ, (இலங்கையின் இன்னொரு முகம்), இரா. வினோத், அறம் பதிப்பகம், ஹென்னூர் மெயின்ரோடு, பெங்களூரு 560077, கர்நாடகா, பக். 120, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-862-3.html

இலங்கைவாழ் மலையகத் தமிழர் குறித்து கவிதை வடிவில் வெளிவந்திருக்கும் வரலாற்ற ஆவணம் இது. மலையக மக்களின் அவலங்களையும் தடங்களையும் கவிதைகள் வழி காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். இலங்கைவாழ் மலையகத் தமிழர் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டுள்ளனர், யாரால் வஞ்சிக்கப்பட்டனர் என்பதை பதிவு செய்வதுடன், இன்றைய யதார்த்தத்தையும் எளிதாகப் புரியும்படி வடித்திருக்கிறார். மலையக மக்கள் ஈழப் போராட்டத்தின் விளைவாக உயிர் மற்றும் உடைமை இழப்புகளை சந்தித்துள்ள வரலாறு இங்கே இலக்கியமாகப் பதிவாகியுள்ளது. கவனத்திற்குரிய கவிதை நூல்.  

—-

 

சிறுவர் சிறுமியருக்கான நபிமார்கள் வரலாறு(1), அபுல் ஹஸன் அலீ அந்தத்வீ, ஸலாமத் பதிப்பகம், லிங்கிச்செட்டித் தெரு, முதல்மாடி, சென்னை 1, பக். 80, விலை 50ரூ.

பூனை, நாய், சிங்கம், கரடி என்று விலங்குகளின் கதைகளையே சிறுவர்களுக்கு வழங்கி வந்த நிலையில், நபிமார்கள், ரஸுல்மார்களுடைய உண்மை வரலாற்றை சின்னஞ்சிறுவர்கள் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட்ட நூல். எளிமையான கதைகள், கூடவே அவைசொல்லும் உண்மை வரலாறுகள், மனதில் பதியும்படி திரும்பத் திரும்ப சொல்லப்படும் வாக்கியங்கள், சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இருக்கிறது. இஸ்லாம் சிறுவர்கள் மட்டுமன்றி மற்ற மதத்தினரின் சிறுவர்களும் படித்துப் பயன்பெறும் வகையில் நூல் அமைந்துள்ளது சிறப்பு. மௌலவி ஷேக் முஹம்மது மழாஹிரியின் எளிய மொழிபெயர்ப்பு சிறகூர்களைக் கவரும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 27/11/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *