விளக்கு இங்கே ஒளி எங்கே?
விளக்கு இங்கே ஒளி எங்கே?, காஞ்சி அண்ணல், மணிவாசகர் பதிப்பகம், பக். 112, விலை 40ரூ.
சமுதாயப் பொறுப்பு அதிகம் கொண்ட ஆசிரியர் கற்பனை, சிந்தனை உணர்ச்சிகள் கலந்து எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் இவை. காந்திஜியின் கடைசி நிமிடங்கள் குறித்து எழுதிய நாடகத்தின் கருவே, நூலின் தலைப்பாக உள்ளது. பொறுமை, அன்பு, நேசம் காக்க விரும்பும் அனைவரும் படிக்கலாம்.
—-
ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும், டாக்டர் கே.ஆர். விட்டல்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 377, விலை 450ரூ. To buy this Tamil book online – www.nhm.in/img_new/100-00-0001-015-5_b.jpg
பாரத நாட்டின் இதயம் சமயங்களில் உள்ளது என்று விவேகானந்தர் கூறினார். சைவ சமயமும், வைணவ சமயமும் பாரத நாட்டின் இரு கண்கள் எனலாம். இந்திய வைணவ இலக்கியம் உருவாவதற்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் முதல் ஆதார நூலாகச் செயல்பட்டது குறித்தும், ஆழ்வார்களின் தத்துவக் கருத்துக்களையும் பக்தி சாதனையையும், இலக்கிய நயத்தையும் இந்நூலாசிரியர் நுண்மாண் நுழைபுலம் கொண்டு விளக்கியுள்ளது படிப்பதற்கு மிக்க இன்பமாக உள்ளது. மலையாள, கன்னட, தெலுங்கு, மராட்டி, குஜராத்தி, இந்தி, விளக்குவது அவரது கடின உழைப்பிற்குச் சான்றாகும். ஒரு பக்திக் கலைக்களஞ்சியமாக விளங்கும் இந்நூலை ஆன்மிக அன்பர்கள் அனைவரும் படித்து பயன் அடையலாம். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 8/12/13.