சோழர் கால ஆடற்கலை
சோழர் கால ஆடற்கலை, ஆர். கலைக்கோவன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 288, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-0.html
ஆசிரியர் இலக்கியச் செல்வர் டாக்டர் மா.ராசமாணிக்கனாரின் புதல்வர். சிராப் பள்ளியில் கண் மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ்பால் உற்ற காதலால் முதுகலைத் தமிழ் பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர். வரலாற்றிலும் முதுகலை நிறைவு. ஆடற்கல்வி கலைஞர்களும் கருவிகளும் அரங்கம் ஆடற்கலைஞர்களும், அவர் தம் வாழ்க்கையும் போன்ற தலைப்புகளில் சோழர் கால ஆடற்கலையைப் பவு செய்து இருக்கிறார். ராஜ ராஜீசுவரம், கங்கைகொண்ட சோழீசுவரம், திருத்தொண்டீசுவரம், மதுரகாளியம்மன் கோவில் போன்ற இடங்களில் காணப்படும் சிலைகளை, ஆழ்ந்து ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். பல அருமையான புகைப்படங்களும், நூலை அணி செய்கின்றன. வரலாற்று ஆய்வு இலக்கிய நூல். -எஸ். குரு. நன்றி: தினமலர், 1/12/13.
—-
தமிழக்குத் தொண்டு செய்த பிறநாட்டு அறிஞர்கள், தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தி.நகர், சென்னை 17.
சமயப் பணி ஆற்ற தமிழ்நாட்டுக்கு வந்த வெளிநாட்டு சான்றோர்கள் பலர், தமிழ் மொழியின் சிறப்பைக் கண்டறிந்து, தமிழை முழுமையாகக் கற்று, தமிழ்ப்பணி ஆற்றினார்கள். இங்கிலாந்ததைச் சேர்ந்த போப், திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். நான் மறைந்தபின் என் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என்று குறிப்பிட வேண்டும் என்று உயில் எழுதினார். (அவர் விரும்பியபடியே லண்டனில் உள்ள அவர் கல்லறையில் தமிழ் மாணவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.) போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு உள்பட 38 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்ட புத்தகம் இது. தமிழறிஞர் பி. இராமநாதன், ரத்தினச் சுருக்கமாக இந்த வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியுள்ளார். புத்தகத்தின் விலை 40ரூ. இதே நூலாசிரியர் எழுதிய பன்னாட்டு அறிஞர்களின் பார்வையில் தமிழும் தமிழரும் என்ற நூலையும் தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை 50ரூ. தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. நன்றி: தினத்தந்தி, 4/12/13