ஏற்றம் தரும் மாற்றம்

ஏற்றம் தரும் மாற்றம், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை ரூ.170.

படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவும், விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்தும் நூல். எளிய முறையில் மதிப்புக் கூட்டுதல் தொழில் மூலம் வெற்றி பெற்ற பலரது அனுபவங்களை தொகுத்தளிக்கிறார் வீ. அரிதாசன். நன்றி: தினத்தந்தி, 4/12/13.  

—-

 

அவ்வையார் அருளிய நல்வழி (வாழ்வியலுரையும் தத்துவார்த்தமும்), கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 256, விலை ரூ.150.

பிற்காலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் எளிமையானவை. நீதிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை, சமய நோக்குடையவை. வாழ்வியலுக்கான வழிகாட்டியாகவும் விளங்குபவை. அவர் இயற்றிய நல்வழி என்னும் நூலை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ.சி.ரகுநாதையரின் தத்துவ விளக்கத்துடன் கூடிய உரையுடன், தம் வாழ்வியல் உரையும் இணைத்து வெளியிட்டுள்ளார் முனைவர் நல்லூர் சா. சரவணன். நாற்பது வெண்பாக்களைக் கொண்டுள்ளது நல்வழி. இதற்கு ரகுநாதையர் எழுதியுள்ள உரை, அவதாரிகை, பதவுரை, இலக்கண முடிவு, அகல உரை, விசாரணையினாற் கண்ட தத்துவ விளக்கவுரை, செய்யுட்களின் பேறு என்ற வரிசையில் அமைந்துள்ளது சரவணன் எழுதியுள்ள வாழ்வியலுரை, ஒவ்வொரு வெண்பாவின் கீழும் இடம் பெற்றுள்ளது. நூலில் பெயர்வைப்பை ஒவ்வொரு பாடலுக்கும் பொருந்தக் கூறி இது இன்ன வகையில், நல்வழி ஆயிற்று என்று இறுதியாக உரைத்திருப்பது எண்ணுதற்குரியது. சாதி இரண்டொழிய வேறில்லை என்ற பாடலை விளக்கும்போது, இச்செய்யுள் நிஷ்காமியத் தவம் செய்வாரை, இன்ப நிலை பெறுதற்கு ஏற்ற கிளர்ச்சி உண்டாகுமாறு உயர்ந்தோர் என, உண்மையைக் கூறுதல் ஆயினும், அங்ஙனம் செய்தாரையும் அதில் தூண்டுமாறு, இடாதார் இழிகுலத்தோர் எனக் கடிந்து கூறுதலானும், நல்வழி ஆயிற்று தத்துவ வார்ப்பில் இவ்வாறு பொருள் கண்டிப்பது, ரகுநாதையரின் ஆழ்ந்த புலமையைக் காட்டும். வாழ்வியலின் தத்துவ உண்மை நெறிகளை நல்ல குடிப் பிறந்தார் இடும்பை கூர் வயிறு ஆவாரே யாரே யழிப்பார் இச்சை பல சொல்லி இடுதுதண்கை முதலிய தொடர்களுக்குக் கூறும் விளக்கங்கள் அருமையானவை. பதிப்பாசிரியரின் வாழ்வியல் உரை எளிமையாய் உள்ளன. -இராம. குருநாதன். நன்றி: தினமலர், 1/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *