கழியல் ஆட்டம்

கழியல் ஆட்டம், முனைவர். வே. கட்டளை கைலாசம், காவ்யா.

நாட்டுப்புற நிகழ்த்துதல் கலைகளில் ஒன்றான ஆண்களின் ஆட்டக் கலையை பற்றியதே கழியல் ஆட்டம் என்ற இந்த நூல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஆண்கள் ஆடும் கோலாட்டம் தான் கழியல் ஆட்டம். இன்றைய சூழலில் பல்வேறு பொழுதுபோக்குகள் மக்களை ஆக்கிரமித்தாலும் நாட்டுப்புற கலைகளில் கிடைக்கும் இயற்கையான உற்சாகம் ஈடில்லாதது. இந்த ஆட்டத்தில் ஒத்த உடற்கட்டுள்ள எட்டு பேர் பங்கு கொண்டு ஆடுவர். கும்மிக்கழியல் என்ற ஆட்ட முறையில் மட்டும் எட்டு பேருக்கு மேல் கலந்து கொள்வர். ஆட்டக்காரர்கள் வட்டமாக சுற்றி நின்று தன்னாளிடமும், தனக்கு எதிர் வரும் ஆளிடமும் கோல் அடித்து ஆடுவர். தென் மாவட்டங்களில் இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர்கள் சமய விழா மற்றும் குடும்ப விழாக்களில் இந்த ஆட்டத்தை நிகழ்த்துவர். ஆட்டத்திற்கு தகுந்த பாடல்கள் ஆட்ட ஆசான் அண்ணாவியால் பாடப்படும். கழியல் ஆட்டத்தின் விதிமுறைகள் புள்ளி விவரங்களுடன் 205 பக்கங்களுடன் முதல் பதிப்பாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இதை செங்குன்றம் முழு நேர நூலகத்தில் படிக்கலாம். நன்றி: தினமலர், 28/7/13  

—-

 

சல்லிக்கட்டு வீரம், எழில்வேந்தன், எழில்வேந்தன் பதிப்பகம், 71/1-8வது தெரு, கிருஷ்ணராஜபுரம், தூத்துக்குடி 2, விலை ரூ. 350.

ஜல்லிக்கட்டின் முதல்படி ஏறுதழுவுதல் என்பதில் தொடங்கி, தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு வரை அனைத்து போட்டிகளையும் நம் முன் படம் பிடித்து காட்டியுள்ளார் நூல் ஆசிரியர். ஜல்லிக்க்ட்டுக்கு முன்பாக காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளையும், அவற்றிற்கு வழங்கப்படும் உணவுகைளயும் பட்டியலிட்டதுடன், ஜல்லக் காளைகளின் வளர்ப்பு முறை, வீரர்களின் பிடிமுறை பற்றியும் விவரிக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரொக தொடரப்பட்ட வழக்குகள், அதற்காக நீதிமன்ற தீர்ப்புகளும் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *