மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?
மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?, மேயோ கிளினிக், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி 6213130, விலை 40ரூ.
உடல்நலக்கல்வி சார்ந்த நூல்களை நலவாழ்வு எல்லோருக்கும் எனும் பிரிவின் கீழ் வெளியிட்டு வரும் அடையாளம் பதிப்பகத்தின் இந்த சிறு புத்தகம் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளை முன்வைக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக் வெளியிட்ட நூலின் தமிழாக்கம்.
—–
ருசியின் ரேகை, நா.நாச்சாள், ஓம் பதிப்பகம், 15, ஆற்காடு ரோடு, வளசரவாக்கம், சென்னை 87, விலை 30ரூ.
கம்பு, சோளம், வரகு, சாமை, தினை என நாம் மறந்துவிட்ட சிறுதானியங்களை கொண்டு செய்யக்கூடிய உணவு வகைகளை விவரிக்கும் சிறு புத்தகம். நமது பாரம்பரியத்துடன் இணைந்த சிறுதானிய சமையல் ஆரோக்கியமானது என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது இந்த புத்தகம்.
—-
நேற்று இன்று நாளை, சோலை, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, விலை 125ரூ.
பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகரும்க விளங்கிய சோலை நக்கீரன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல் சம்பவங்கள் குறித்த விமர்சன பார்வையோடு பல அரிய தகவல்களையும் கொண்டிருக்கிறது. -இரா. நரசிம்மன், கவின்மலர். நன்றி; இந்தியாடுடே, 13/11/13