ஆணிவேர்

ஆணிவேர், நா. நாச்சாள், ஓம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. இயற்கை விவசாயம் முதல், நஞ்சில்லா உணவு வரை, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை பற்றி விரிவாக கூறியுள்ளார். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பலவும், ஆழ்ந்த ஆய்வுக்கு பின்னரும், நீண்ட நெடிய அனுபவத்தின் அடிப்படையிலும் வளர்ந்த மரபு என்பதை நிறுவுயுள்ளார். பற்பசை, சோப்பு, முகப்பவுடர் என அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு மாற்று என்ன என்பதையும் விரிவாக விளக்கி உள்ளார். நம் பாரம்பரிய உணவு வகைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. சத்தான சிறுதானியங்கள் […]

Read more

தேர்விலும் வெல்வோம்

தேர்விலும் வெல்வோம், கவி முருகபாரதி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 30ரூ. மாணவர்கள் வெற்றி என்ற இலக்குநோக்கி பயணம் செய்வது எப்படி என்று எளிய நடையில் பல உதாரணங்களுடன் சொல்லித்தரும் நூல். தேர்வில் நூற்றுக்கு நூறு எடுப்பதன் அவசியத்தைக் கூறி, நூற்றுக்கு நூறு எடுப்பதற்கான பத்து வழிகளையும் தருவது சிறப்பு. மாணவர்கள் தேர்வில் மட்டுமல்ல வாழ்விலும் வெல்வது எப்படி என்பதை பளிச்சென விளக்கி, மாணவர் சமூகத்தை வல்லமைப்படுத்த முனைந்துள்ளார் ஆசிரியர் கவி. முருகபாரதி. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இந்நூலைப் படித்தால் அவர்கள் […]

Read more

பொது அறிவுப் புதையல்

பொது அறிவுப் புதையல், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 280ரூ. சின்னஞ்சிறு உயிரினங்களான பூச்சிகள், வண்டுகள் முதற்கொண்டு, பறவைகள், விலங்குகள் ஆகியவை குறித்த அறிவியல் கருத்துகளைக் கூறும் நூல். மேலும் பல அறியப்படாத வரலாறு, அறிவியல், புவியியல், வானியல், கலை, இலக்கியம், சமூகவியல் தொடர்பான செய்திகளையும் இந்த நூலில் ஆசிரியர் உ. கருப்பணன் தொகுத்து வழங்கியுள்ளார். சாதாரணமாக அனைவரும் தெரிந்து வைத்துள்ள தகவல்களாக இல்லாமல், புதிய செய்திகளையும் அரிய தகவல்களையும் தந்திருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுக்ளில் பங்கேற்போருக்கும் பயனுள்ள நூல். […]

Read more

தமிழர் நெல்

தமிழர் நெல், ஓம் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 60ரூ. தமிழர்களின் உணவு, கலாச்சாரம், விழாக்கள் போன்ற அனைத்திலும் நெல்லும் அரிசியும் ஒன்றாகக் கலந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமான அந்த அரிசி அன்று நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாய் இருந்தது. இன்று சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல வியாதிகளுக்குக் காரணமாகிவிட்டது. அதற்குக் காரணம். இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள்தான். இவற்றால் நம் பாரம்பரிய அரிசியின் தன்மைகெட்டு, நோய்க்கான இடமாக இக்கால அரிசி மாறிவருவதைச் சுட்டிக்காட்டுவதோடு, இன்றும் நம்மிடம் உள்ள பாரம்பரிய அரிசிகள் எவை, […]

Read more

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?, மேயோ கிளினிக், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி 6213130, விலை 40ரூ. உடல்நலக்கல்வி சார்ந்த நூல்களை நலவாழ்வு எல்லோருக்கும் எனும் பிரிவின் கீழ் வெளியிட்டு வரும் அடையாளம் பதிப்பகத்தின் இந்த சிறு புத்தகம் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளை முன்வைக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக் வெளியிட்ட நூலின் தமிழாக்கம்.   —–   ருசியின் ரேகை, நா.நாச்சாள், ஓம் பதிப்பகம், 15, ஆற்காடு ரோடு, வளசரவாக்கம், சென்னை 87, விலை 30ரூ. கம்பு, சோளம், வரகு, சாமை, […]

Read more