ஆணிவேர்

ஆணிவேர், நா. நாச்சாள், ஓம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. இயற்கை விவசாயம் முதல், நஞ்சில்லா உணவு வரை, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை பற்றி விரிவாக கூறியுள்ளார். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பலவும், ஆழ்ந்த ஆய்வுக்கு பின்னரும், நீண்ட நெடிய அனுபவத்தின் அடிப்படையிலும் வளர்ந்த மரபு என்பதை நிறுவுயுள்ளார். பற்பசை, சோப்பு, முகப்பவுடர் என அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு மாற்று என்ன என்பதையும் விரிவாக விளக்கி உள்ளார். நம் பாரம்பரிய உணவு வகைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. சத்தான சிறுதானியங்கள் […]

Read more

பொது அறிவுப் புதையல்

பொது அறிவுப் புதையல், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 280ரூ. சின்னஞ்சிறு உயிரினங்களான பூச்சிகள், வண்டுகள் முதற்கொண்டு, பறவைகள், விலங்குகள் ஆகியவை குறித்த அறிவியல் கருத்துகளைக் கூறும் நூல். மேலும் பல அறியப்படாத வரலாறு, அறிவியல், புவியியல், வானியல், கலை, இலக்கியம், சமூகவியல் தொடர்பான செய்திகளையும் இந்த நூலில் ஆசிரியர் உ. கருப்பணன் தொகுத்து வழங்கியுள்ளார். சாதாரணமாக அனைவரும் தெரிந்து வைத்துள்ள தகவல்களாக இல்லாமல், புதிய செய்திகளையும் அரிய தகவல்களையும் தந்திருப்பது நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. மாணவர்களுக்கும், போட்டித் தேர்வுக்ளில் பங்கேற்போருக்கும் பயனுள்ள நூல். […]

Read more