ஆணிவேர்
ஆணிவேர், நா. நாச்சாள், ஓம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ.
இயற்கை விவசாயம் முதல், நஞ்சில்லா உணவு வரை, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை பற்றி விரிவாக கூறியுள்ளார். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பலவும், ஆழ்ந்த ஆய்வுக்கு பின்னரும், நீண்ட நெடிய அனுபவத்தின் அடிப்படையிலும் வளர்ந்த மரபு என்பதை நிறுவுயுள்ளார்.
பற்பசை, சோப்பு, முகப்பவுடர் என அன்றாடம் பயன்படுத்தும் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கு மாற்று என்ன என்பதையும் விரிவாக விளக்கி உள்ளார். நம் பாரம்பரிய உணவு வகைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
சத்தான சிறுதானியங்கள் முதல், நஞ்சில்லா உணவு வகைகள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மற்ற பல நாடுகளில் இல்லாதவகையில், இந்தியாவில் உப்பு பயன்படுத்துவது பற்றியும், அதன் பின்னணி பற்றியும் கூறியுள்ளார்.
மக்களின் வாழ்வியல் மாறிப் போனதால், எதையெல்லாம் இழந்துள்ளோம் என்பதும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
-ஜே.பி.
நன்றி: தினமலர், 17/4/2016.