அ. ஞானசம்பந்தன்

அ. ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ.

‘புதிய புதிய அல்லல்களில் சிக்கித் தவிக்கும் தமிழ்ச் சமுதாயம், பெரிய புராணத்தைக் கற்பதன் மூலம் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ முற்படுமென்று நம்புகிறேன்.’(பக். 72) என்று கூறும், ‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியரான’ அ.க. ஞானசம்பந்தன், 35 ஆய்வு நூல்களையும், மூன்று மொழிபெயர்ப்பு நூல்களையும், ஆறு பதிப்பு நூல்களையும் வெளியிட்டு, அன்னைத் தமிழுக்கு அரணாகவும், அணியாகவும் விளங்கி 85வது அகவையில் காலமானார்.

நாவலர் சோமசுந்தர பாரதியாரால் இலக்கியத் துறைக்கு வந்த அ.ச..வின் தந்தையார் அ.மு.சரவண முதலியார், ‘பெருஞ்சொல் விளக்கனார்’ என்று பாராட்டப்பட்ட தமிழறிஞர், ‘கம்பன் கழகம், சேக்கிழார் ஆய்வு மையம்’ போன்றவை இன்றும் திறம்பட செயலாற்ற, அ.ச.ஞா., வின் பங்கு மகத்தானது. அ.ச.ஞா., வைப் பற்றி அறிந்துகொள்ள, இது ஒரு வழிகாட்டி நூலாக அமையும்.

-பின்னலூரான்.

நன்றி: தினமலர், 17/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *