மனிதனாகும் பொருளே

மனிதனாகும் பொருளே, கே.வி. புருஷோத்தமன், செல்வி பதிப்பகம், 14, நான்காவது குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி 605011, பக். 134, விலை 100ரூ.

ஆசிரியர் தமக்குத் தெரிந்த அனுபவச் சுவடுகளைத் தொகுத்து, இடை இடையே சிறு சிறு கதைகளை ஆங்காங்கே பொருத்தி எழுதியுள்ள, 31 கட்டுரைகள் அடங்கிய புத்தகம். கல்லூரி மாணவர்கள், இந்த நூலைப் படித்தால் பெரிதும் பயன் அடைவர். எளிய தமிழ்நடை, அரிய அருமையான கருத்துக்கள். நூலாசிரியர் தாம் நினைத்ததை எழுத்தில் சிறப்பாக வடித்துள்ளார். -ஜனகன்.  

—-

 

ஸ்ரீ அருணாசல பஞ்சரத்னம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீ ரமண பக்த சமாஜம், பக். 96, விலை 80ரூ.

ஸ்ரீ ரமண மகரிஷியின் மீது, பக்தி கொண்டோருக்கு இந்த விளக்கவுரை புத்தகம் ஒரு அருமையான அருள் பிரசாதம். மகரிஷி அருளியது அரணாசல ஸ்துதி பஞ்சகம். அதில் ஐந்தாவது பாடற் தொகுதி அருணாசல பஞ்சரத்னம். முகவைக் கண்ண முருகனடிமை, மகரிஷியின் பக்திப் பனுவல்களில் ஈடுபாடு கொண்ட நல்லறிஞர். அவர் புகழை பேச்சின் மூலமும் எழுத்தின் வாயிலாகவும், பரப்பி வருபவர் . இந்தப் புத்தகத்தில் அவதாரிகை என்று ஒரு கட்டுரை நூலில் சொல்ல வந்த கருத்துக்களை எல்லாம் கூறுவது அவதாரிகை ஆகும். ஸ்ரீரமணோபதேசங்களின் சாரமாக உள்ள கட்டுரைப் பகுதி இது. நல்ல ஆன்மிகம் பேசும் உயர்தர ஸ்ரீரமண பொக்கிஷம் இது. -ஜனகன்.  

—-

 

விகடன் இயர் புக் 2014, விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600002, பக். 864, விலை 135ரூ.

விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த, ஆண்டு புத்தகத்தில், உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், பொதுஅறிவு என்ற தலைப்புகளில், பல்வேறு கட்டுரைகள், தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் புத்தகத்தின் இறுதிப் பகுதியில், ஆங்கிலத்தில் சில தகவல்களும், க்விஸ் பக்கங்களும் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக விகடன் பிரசுரம் சார்பில் வெளியான முக்கிய நூல்களின் பட்டியலையும் இணைத்துள்ளனர். புத்தகத்தை இணையத்தில் வாசிப்பதற்காக, புத்தகத்தோடு ஒரு ஸ்க்ராட்ச் சார்டும் தருகின்றனர். நன்றி:தினமலர்,12/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *