ஆசியாவின் பேரொளி

ஆசியாவின் பேரொளி, எம்.ஏ. பழனியப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 55ரூ.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, அரசியல் பிரவேசம், சுதந்திர தாகம், பேச்சாற்றல், தைரியம் ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டங்கள், சிறைவாழ்வு, நிர்வாகத்திறன், இறுதி நாட்கள், மறைவு ஆகிய விவரங்கள் ஆகியவை படிக்க சுவாரசியமாக உள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014.  

—-

 

சங்கீத சற்குரு தியாகராஜர், ஜெ. அரவிந்த்குமார், லதா பதிப்பகம், ஜி3, பத்மா காம்ப்ளெக்ஸ், 2, கன்னியப்பன் தெரு, வடபழனி, சென்னை. பக். 344, விலை 200ரூ.

கர்நாடக இசை உலகின் மும்மூர்த்திகள் என்று சொல்லப்படுபவர்களுள் முதன்மையானவரான தியாகராஜரின் வாழ்க்கைச் சரித்திரத்தை நூலாகத் தந்துள்ளார் அரவிந்த் குமார். நூலின் உச்சககட்ட சிறப்பு தியாகராஜ கீர்த்தனைகளைச் சொல்லி, அவற்றிற்கு அகான எளிய தமிழில் விளக்கங்களை இணைத்திருப்பதுதான். ஒவ்வொரு கீர்த்தனைகளிலும் உள்ள பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகியவற்றிக்கு விளக்கம் தந்துள்ளது சிறப்பு. இது சாதாரண பணியன்று. புதிதாக இசை பயிலுபவர்கள் மட்டுமின்றி, இசையில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் இந்நூல் உதவும். தியாகராஜரின் சரித்திரம், மகான் ராமர் மீதிருந்த பக்தியை எப்படி கீர்த்தனைகளாக வடித்து மனமுருகப் பாடினார் போன்ற விஷயங்கள் நூலை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. ஹரிணி இசைப்பள்ளி மூலம் பல இசைக் கலைஞரை உருவாக்கியவர் நூலாசிரியர் என்பது கூடுதல் சிறப்பு. நன்றி: குமுதம், 8/1/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *