பாரதி ஒரு திருப்புமுனை
பாரதி ஒரு திருப்புமுனை, முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம், 15, கலைவாணி நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ.
பாரதியார் ஒரு வைரச் சுரங்கம். அவரது கவிதை வரிகளில் மின்சாரம் எடுக்கலாம். அந்த முயற்சியில் புதுவை ஆய்வு அறிஞர் அறிவு நம்பி புதுமை தோய்ந்து, பத்து கோணங்களில் பாரதியாரை பதிவு செய்துள்ளார். பாரதி உருவாக்கிய பாராட்டுப் பரம்பரை, புதுக்கவிதை முதலில் தந்தது, பாரதியின் பேனா புதுமையை நிரப்பி சிறுகதை புனைந்து, வேதத்தை புதுக்கியது, சோதனை முயல்வுகள் போன்ற கருத்துப் புரட்சியால், பாரதி ஒரு திருப்புமுனை என்று முதலிலேயே முத்தாய்ப்பு வைக்கிறார். சமத்துவம் இல்லாத பள்ளித் தலம் அனைத்தையும் சமநிலை பெறும் கோவில் ஆக்குவோம் என்று நுட்பாக விளங்கிய திறன் போற்றத்தக்கது. -முனைவர் மா.கி. ரமணன்.
—–
பகவத் கீதை (விளக்க உரை), சுவாமி ராமா, கண்ணதாசன் பதிப்பகம், பக். 560, விலை 300ரூ.
ஒப்பற்ற பகவத் கீதைக்கு ஸ்ரீமத் சங்கரர், ஸ்ரீமத் மத்வர் ஆகிய மூவர் விரிவுரை செய்துள்ளனர். வேறுபட்ட வழிகளை இவர்கள் கூறிய போதிலும் சென்றடையும் இடம் ஒன்றாகவே கண்டனர். டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய உரை, தத்துவார்த்தமானது என்பர். ஸ்ரீ அரவிந்தர் தம் விரிவுரையில் ஞானோதயம், கர்மயோகம், பக்தி யோகம் ஆகிய மூன்றையும் கீதை அளிக்கிறது என்கிறார். பாலகங்காதர திலகர், தாம் எழுதிய கீதா ரகசியத்தில், கர்மயோகத்தை கீதை வலியுறுத்தவதாகக் கூறுகிறார். வினோபா தமது கீதை விரிவுரையில் பற்றற்ற முறையில் செயல் புரிவதை கீதை கூறுகிறது என்கிறார். சுவாமி ராமா எழுதியுள்ள இந்நூல் கீதையின் உளவியல் கோட்பாடுகளை விளக்கிக் கூறுகிறது. -கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 19/1/14.