நதியின் பிழையன்று
நதியின் பிழையன்று, வெ. இன்சுவை, பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 90ரூ.
காலம் மாறிப்போய்விட்டான். அவனுடைய வாழ்க்கை நெறிமுறைகளும் மாறிப்போய்விட்டன. சரிந்து போய்க் கொண்டிருக்கும் பண்பாட்டு சீரழிவை எப்படி சரிசெய்யப் போகிறோம்? விதவிதமான மனிதர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு மனம் கொதித்து தனது கோபத்தையும், ஆற்றாமையையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியை வெ.இன்சுவை.
—-
வளம் தரும் பரிகார ஸ்தலங்கள், ஏ. ஜெயப்பிரகாஷ், ஸ்ரீ அலமு பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 25ரூ.
இறைவன் இருக்கும் ஆலயம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு வகையில் பெருமைப்படுகிறது. கல்வியில் மேலோங்க, துன்பம் நீங்க, நோய்கள் அகல என ஒவ்வொன்றுக்கும் பரிகார ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து தரும் நூலாக இந்நூல் இருக்கிறது. நன்றி: தினத்தந்தி.