வாழ்க்கைக் கோயில்கள்
வாழ்க்கைக் கோயில்கள், மயன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 115ரூ.
கோயில்கள் பற்றிய புத்தகங்கள் தமிழில் நிறைய வந்துள்ளன. அவற்றில் இந்நூல் வித்தியாசமானது. முக்கியமானது. திருமணத்தடை நீக்கும் கோயில்கள் பிரிந்தவர் கூடிட வழி செய்யும் தலங்கள், வம்ச விருத்திக்கு அருள் பாலிக்கும் ஆலயங்கள், கண்ணொளி தரும் திருத்தலங்கள் இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் ஆலயங்களின் சிறப்பை விவரித்திருப்பது சிறப்பாக உள்ளது. இந்தப் பரிகார கோயில்கள் எங்கே உள்ளன. அங்கு எப்படிப் போவது என்பவை போன்ற பயனுள்ள குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. படங்கள் கண்ணைக் கவருகின்றன. பக்தர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் மிகவும் பயனுள்ள புத்தகம்.
—-
திருக்குறள், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 125ரூ.
உலக பொதுமறையான திருக்குறளை மிக எளிய தெளிவுரையுடன் வழங்கி உள்ளார் உரை ஆசிரியர் பூவை அமுதன். ஓலைச் சுவடி வடிவில் அழகாக புத்தகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.
—-
சுட்டிப் பூங்கா, கவிஞர் பே. ராஜேந்திரன், மின்னல் கலைக்கூடம், 17, எல்டாம்ஸ் ரோடு, சென்னை 18, விலை 30ரூ.
மழலைகளை முன்வைத்து எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு. கை நோகிறது இறங்கினால் மனம் நோகிறது உள்ளிட்ட பல ஹைகூ கவிதைகள் சிலிர்க்க வைக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 10/10/2012.