நன்னயம்

நன்னயம், வசீகரன், மின்னல் கலைக்கூடம், விலை 250ரூ. சிறுபத்திரிகையாளர், கவிஞர் என அறியப்பெற்ற வசீகரன் எழுதிய 83 குறுங்கட்டுரைகளின் தொகுப்பு இது. 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும்கூட, இன்றைக்கும் வாசிக்கையில் கட்டுரைகளின் பொருண்மையும், எளிமையும் வசீகரிக்கவே செய்கின்றன. மாற்றங்களும் தடுமாற்றங்களும், கேட்பவர்களும் கேளாதவர்களும், மலட்டுக் காரணங்கள் என ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வாழ்க்கை நெறியைச் சுருங்கக்கூறி விளங்க வைக்கின்றன. நூலாசிரியரின் தொடர் புத்தக வாசிப்பும், பத்திரிகை அனுபவமும் கட்டுரைகளின் உருவாக்கத்துக்குக் கை கொடுத்துள்ளன. நன்றி: தி இந்து, 9/9/2017.

Read more

வாழ்க்கைக் கோயில்கள்

வாழ்க்கைக் கோயில்கள், மயன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 115ரூ. கோயில்கள் பற்றிய புத்தகங்கள் தமிழில் நிறைய வந்துள்ளன. அவற்றில் இந்நூல் வித்தியாசமானது. முக்கியமானது. திருமணத்தடை நீக்கும் கோயில்கள் பிரிந்தவர் கூடிட வழி செய்யும் தலங்கள், வம்ச விருத்திக்கு அருள் பாலிக்கும் ஆலயங்கள், கண்ணொளி தரும் திருத்தலங்கள் இவ்வாறு பல்வேறு தலைப்புகளில் ஆலயங்களின் சிறப்பை விவரித்திருப்பது சிறப்பாக உள்ளது. இந்தப் பரிகார கோயில்கள் எங்கே உள்ளன. அங்கு எப்படிப் போவது என்பவை போன்ற பயனுள்ள குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. படங்கள் கண்ணைக் […]

Read more

அன்பே வெல்லும்

அன்பே வெல்லும், கலாநிகேதன் பாலு, செந்தூரான் பதிப்பகம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்மபலம், சென்னை 33, விலை 117ரூ. கதை என்றால் சிறுவர்களுக்க மிகவும் பிடிக்கும். நீதிபோதனைகளை வலியுறுத்தும் கதைகளை அவர்களுக்கு கூறும்போது, அவர்கள் நற்சிந்தனையுடனும், நல்ல அறிவாற்றலுடனும் வளர்வார்கள். அதற்கு வழிகாட்டும் வகையில் பல நீதிபோதனைகளை உள்ளடக்கிய சிறுவர் கதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல்.   —-   கடுக்குக்குள் கடல், பாவலர் கருமலைப் பழம் நீ, மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை 18, விலை 30ரூ. படிக்கத்தூண்டும் […]

Read more