நன்னயம்
நன்னயம், வசீகரன், மின்னல் கலைக்கூடம், விலை 250ரூ.
சிறுபத்திரிகையாளர், கவிஞர் என அறியப்பெற்ற வசீகரன் எழுதிய 83 குறுங்கட்டுரைகளின் தொகுப்பு இது.
30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரைகள் என்றாலும்கூட, இன்றைக்கும் வாசிக்கையில் கட்டுரைகளின் பொருண்மையும், எளிமையும் வசீகரிக்கவே செய்கின்றன.
மாற்றங்களும் தடுமாற்றங்களும், கேட்பவர்களும் கேளாதவர்களும், மலட்டுக் காரணங்கள் என ஒவ்வொரு கட்டுரையும் ஒரு வாழ்க்கை நெறியைச் சுருங்கக்கூறி விளங்க வைக்கின்றன.
நூலாசிரியரின் தொடர் புத்தக வாசிப்பும், பத்திரிகை அனுபவமும் கட்டுரைகளின் உருவாக்கத்துக்குக் கை கொடுத்துள்ளன.
நன்றி: தி இந்து, 9/9/2017.