அன்பே வெல்லும்
அன்பே வெல்லும், கலாநிகேதன் பாலு, செந்தூரான் பதிப்பகம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்மபலம், சென்னை 33, விலை 117ரூ.
கதை என்றால் சிறுவர்களுக்க மிகவும் பிடிக்கும். நீதிபோதனைகளை வலியுறுத்தும் கதைகளை அவர்களுக்கு கூறும்போது, அவர்கள் நற்சிந்தனையுடனும், நல்ல அறிவாற்றலுடனும் வளர்வார்கள். அதற்கு வழிகாட்டும் வகையில் பல நீதிபோதனைகளை உள்ளடக்கிய சிறுவர் கதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல்.
—-
கடுக்குக்குள் கடல், பாவலர் கருமலைப் பழம் நீ, மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை 18, விலை 30ரூ.
படிக்கத்தூண்டும் கவிதைகள், சான்று- மானம் காக்கவா இத்தனை ஆடைகள்? வெங்காயம்.
—-
விழி பேசும் மொழி, த. சுமித்ரா, 17, தியாகி செல்லதுரை நகர், ஈ.பி. காலனி, என்.கே.ரோடு, தஞ்சாவூர் 6, விலை 60ரூ.
வார்த்தைகள் நடந்தால் அது வசனம். வார்த்தைகள் நடமாடினால் அது கவிதை என்கிறார். வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான், இந்த நூலில் கவிஞர் த.சுமித்ரா எபதியுள்ள கவிதைகள் உண்மையிலேயே நடனம் ஆடுகின்றன. கருத்தாழமும், சொல் நயமும் மிக்க கவிதைகளை எழுதியுள்ளார். எல்லாம் நெஞ்சைத் தொடும் கவிதைகள். நன்றி: தினத்தந்தி, 7/8/13.