ஆகஸ்ட் 15
ஆகஸ்ட் 15, சாய்சூர்யா, 204/43, டி7, பார்சன் குருபிரசாத் ரெசிடென்சியல் காம்ப்ளக்ஸ், டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18, விலை 450ரூ.
இது புதுவிதமான நாவல். 1947 ஆண்டு 15ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்குமுன், 1922 ஆகஸ்ட் 15ந்தேதி பிறந்த கல்யாணம், பின்னர் மகாத்மா காந்தியின் காரியதரிசியாக இருந்திருக்கிறார். 2000வது ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி பிறந்த சத்யா இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம். பொதுவாக சரித்திரக் கதை என்றால், சரித்திரம் குறைவாகவும், கற்பனை அதிகமாகவும் இருக்கும். இதில் கற்பனை குறைவாகவும், உண்மைச் சம்பவங்கள் அதிகமாகவும் உள்ளன. கதாசிரியர் குமரி எஸ். நீலகண்டன் மிகவும் சிரமப்பட்டு இதுவரை நாம் கேள்விப்பட்டிராக சரித்திர உண்மைகள் பலவற்றை சேகரித்து, இந்த சமூக நாவலை உருவாக்கியிருக்கிறார். பாராட்டுக்குரிய முயற்சி.
—-
மனுஷ்யபுத்ரி, கலா பாலசுப்ரமணியன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 75ரூ.
பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட 9 சிறுகதைகள் அடங்கிய நூல்.
—-
தாயைப் பிரிந்த யானைக்குட்டி, ஹெலன் ஞானப்பிரிகாசம், வசந்தா பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 108ரூ.
இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிறுவர் கதையும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். நன்றி:தினத்தந்தி, 10/7/2013.