என்றும் இன்பம் பெருகும்

என்றும் இன்பம் பெருகும், மா.கி. ரமணன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை 4, பக். 165, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-0.html

வாழ்வை வளமாக்கும் திருமந்திரம் எனும் நூலை எழுதிய இந்நூலாசிரியர் மறுமை நோக்கி கொடை வழங்காமல் கேட்பவன் வறுமை நோக்கி வழங்க வேண்டுமென்னும் புறநானூறு வரிகளுக்கேற்ப பக்தி இலக்கியங்களை சமுதாய நன்மைக்காக பரப்பி வரும் தொண்டர். இந்நூலில் என்றும் இன்பம் பெருகும், ஆடல் சபையும் பாடல் சுவையும், வள்ளலாரும் ஒற்றியூரும், தமிழில் ஐந்தருவி, தூது சென்ற ஐவர், இப்படி 21 கட்டுரைகள் உள்ளன. பிரம்மாவாகவும், வசிட்டராகவும் இருந்து இன்றும், சிலர் செய்யும் மரபு வழி புரோகிதம் பிராமாதம் எனும் வழி காட்டும் புனிதர் கட்டுரையும், வயிற்றுப் பசிக்கு உணவகம், அறிவுப் பசிக்கு நூலகம், ஆன்மப் பசிக்கு ஆலயம் என்னும் கற்கோயிலும் சொற்கோயிலும் கட்டுரையும் வித்தியாசமானவை. பக்தி நெறியைப் பண்புடன் வளர்க்கும் முத்தான கட்டுரைகளின் தொகுப்பு.  

—-

 

மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளி 125 ஆவது ஆண்டுவிழா மலர்.

மதுரை மாநகரில் பெருமை மிக்க பள்ளி, சேதுபதி மேனிலைப் பள்ளி ஆகும். மதுரை வடக்கு வெபளி வீதியில் அமைந்திருக்கிறது. தமிழ் வளர்த்த பாஸ்கர சேதுபதி, ஆதரவு தந்து வளர்த்த பள்ளி, மகாகவி பாரதியார் பணியாற்றி பெருமை படைத்த பள்ளி. இச்சிறப்பு மலரில் பாரதியார் பெருமை பேசும் தகவல்களும், பள்ளியின் தொடர் சிறப்புகளும் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன.  

—-

 

மீண்டும் ஜனனம், பானு சங்கரன், சத்திய தீபம் பதிப்பகம், வடலூர், பக். 60, விலை 60ரூ.

எளிய நடை, யதார்த்தத்துடன் கூடிய கவிதைகள் இவை. உணர்ந்தவர்களால் தான் சில உணர்வுகளை உணர முடியும் என்ற அடிப்படையில் உருவான கவிதைகள் இவை. குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கவிதையில் இறைவணக்கம் சொல்லும் நேரம் நீ இயந்திரத்தோடு உள்ளாய் என்ற வரிகள் நெஞ்சைத் தொடும். கவிதைகளை வாசிப்போர் இந்த நூலை நேசிப்பர். நன்றி: தினமலர், 2/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *