திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள்
திருவாரூர் கே. தங்கராசு நினைவலைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், பக். 288, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-212-2.html
1947ஆம் ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் தலைமையில் இயக்கப் பணியாற்றி கழகத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற திருவாரூர் கே. தங்கராசுவின் பெரியார் பற்றிய, கழகம் பற்றிய நினைவலைகளின் தொகுப்பே இந்நூல். அந்த வகையில் இது அறுபத்தைந்து ஆண்டுகால திராவிடர் இயக்கத்தின் வரலாறாக காணும் தகுதி கொண்டிருக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவராக கே. தங்கராசு இந்நூல் வழி நம் மனதில் பதிகிறார். இயக்கத்தின் வளர்ச்சிக்கு தமிழினத்தின் மான மீட்புக்கு, பகுத்தறிவு எழுச்சிக்கு திருவாரூர் தங்கராசு எந்தளவு உறுதுணையாக விளங்கினார் என்பதை இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் உணர்த்துகிறது. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 26/2/2014.
—-
பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை, ஆங்க் ஸ்வீ சாய், தமிழில் பெமினா, அடையாளம், புத்தாநத்தம், பக். 422, விலை 320ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-729-1.html
மலேசியாவில் உள்ள பினாங்கைச் சேர்ந்த மருத்துவரான ஆங்க் ஸ்வீ சாய், பிரிட்டனில் உள்ள செயின்ட் பர்தோலோ மியூ மருத்துவமனையில் தற்போது பணியாற்றுகிறார். 1982இல் பெய்ரூத் நகர் மீது இஸ்ரேலியப் போர் விமானங்கள் தொடர்ந்து நடத்திய தாக்குதல்களை தொலைக்காட்சியில் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பெய்ரூத்தில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய அங்கு சென்றார். பாலஸ்தீன மக்கள் படும் துன்பங்களை நேரில் கண்ட இந்நூலை அவர் எழுதியிருக்கிறார். அவர் குறிப்பிடும் சம்பவங்கள் நம்மை உருக வைக்கின்றன. உதாரணமாக, ஒரு நாள் இரவு தாய்மார்கள் தண்ணீர் பிடிக்க வெளியே சென்றார்கள். எப்போதும் தோட்டாக்கள் பாயும் திறந்த வெளியில் அந்தக் கிணறு இருந்தது. தண்ணீர் பிடிக்க வெளியே செல்லும் முன்பு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை முத்தமிட்டு விடை பெறுவார்கள். காரணம், திரும்பவும் அவர்களைப் பார்க்க முடியுமென்பது நிச்சயமில்லை என்கிற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. அன்றிரவு வெளியே சென்ற பத்துப்பெண்களில் நால்வர் மட்டுமே திரும்பினார்கள். மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பெண்கள் தண்ணீர் பிடிக்கச் செல்வதே உயிரைப் பணயம் வைக்கும் செயலாகிவிட்டது நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. பாலஸ்தீன இஸ்ரேல் மோதல்களுக்கு காரணம், பாலஸ்தீன நாட்டை, அழித்து அதன் மக்களை விரட்டியடித்துத்தான் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க முடியும் என்ற தவறான எண்ணம்தான் என்கிறார் நூலாசிரியர். பாலஸ்தீன மக்களின் போராட்டத்தைத் தெரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 24/2/2014.
To buy this Tamil book online: