வானம் என் வாசலில்
வானம் என் வாசலில், பா. கிருஷ்ணன், பாகி எழுத்துலகம், 76, பத்திரிகையாளர் குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை 41, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-6.html
தேடித் தேடி, சாலை, கனவுகள், விழியே போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதை சொற்கள் புத்தக வடிவில் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் அதனுடைய தொடர்புடைய புகைப்படமும் இடம்பெற்றிருப்பது சிறப்பாகும். நன்றி: தினத்தந்தி, 12/3/2014.
—–
ஹாரி பாட்டரும் பாதாள அறை ரகசியங்களும், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 2வது மாடி, உஷா பிரீத் வளாகம், 42, மால்வியா நகர், போபால் 462803, விலை 350ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-2.html
சர்வதேச அளவில் விற்பனையில் அமோகமான சாதனைகளைப் படைத்திருக்கும் ஹாரிபாட்டர் புத்தக வரிசையின் 2ம் புத்தகம். முதல் புத்தகத்தைப்போலவே பக்கத்திற்குப் பக்கம் மாயாஜாலம். படு சுவாரசியமான கதையோட்டம். வாசகர்களால் யூகிக்க முடியாத திகிலான திருப்பங்கள் ஆகியவை நிறைந்துள்ள இப்புத்தகத்தைக் கையில் எடுத்தால் எவரொருவராலும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. நூலாசிரியர் ஜே.கே.ரோலிங் ஆங்கிலத்தில் படைத்ததை தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறார் பி.எஸ்.வி. குமாரசாமி. நன்றி: தினத்தந்தி, 12/3/2014.
To buy this Tamil book online: