பிரபஞ்ச வசியம்
பிரபஞ்ச வசியம், டாரட் எம். ஆர். ஆனந்தவேல், ஆனந்தா பதிப்பகம்.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதத்தை, குருவின் அருளினாலும், இஷ்ட தெய்வத்தின் ஆசியினாலும், வசியம் செய்துவிட இயலும் என்று சொல்லுகிறார் இந்த நுலாசிரியர். எந்த அறிவியல் அற்புதக் கண்டுபிடிப்புகளினாலும், பஞ்சபூத சக்திகளை எதிர்கொள்ள இயலாது என்று கூறும் நூலாசிரியர், கர்ம வினைப் பயன்களின் சுக துக்கங்களிலிருந்தும், எந்த மனிதனாலும் தப்பிவிட முடியாது என்றும் கூறியுள்ளார் நூலாசிரியர். ரிஷிகள், ஞானிகள், சித்தர்கள் போன்றோரின் அமானுஷியச் செயல்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்களின் சிந்தனை, செயல்களை அடியொட்டிச் செயல்படும் நூலாசிரியரின் படைப்பு இது. -ஜனகன். நன்றி: தினமலர், 23/3/2014.
—-
காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், பக். 264, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-7.html தமிழகத்தில் தெவிட்டாத இன்பம் எது என்றால், ராமாயணக் கதை கேட்பதுதான் என்று அறுதியிட்டுக் கூறலாம். ராமாயண கதையை எந்த வகையில் சொன்னாலும், மக்கள் இன்புறுவர். இந்நூல், அபூர்வ ராமாயணம் என்ற நூலிலிருந்து சில பகுதிகளைச் சுவையுடன் விளக்குகிறது. நூலாசிரியரின் எளிய, இனிய தமிழ் நடை, நூல் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது எனலாம். தொட்டிலில் படுத்திருந்த ராமன், பூஜை அறையில் பொற்கிண்ணத்தில் இருந்த பாயசம் சாப்பிட்ட நிகழ்ச்சியும்(பக்.3), காட்டிற்கு வந்த ராமனை பரதன் அழைத்துச் செல்ல வந்தபோது, ஜனக மகாராஜாவும் உடன் வந்தார் என்பதும் (பக். 93), வீடனண் அடைக்கலம் புகுந்தபோது, இலக்குவன் கேட்ட கேள்வி (பக். 141), ராவணன் சங்கரனிடம் வாள் பெற்றது (பக். 146) போன்ற செய்திகள், இதுவரை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். இப்படி, பல சுவையான செய்திகளை 44 தலைப்புகளில் இந்நூலில் தெரிவிக்கும் நூலாசிரியரின் திறனைப் பாராட்ட வேண்டும். -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 23/3/2014.