அறிவியல் முதல்வர்கள்
அறிவியல் முதல்வர்கள், தேவிகாபும் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை 98, விலை 70ரூ.
அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை கதைகளை மாணவர்களிடம் எளிமையாக அறிமுகப்படுத்தும்விதத்தில் எழுதப்பட்டிருககிறது இந்நூல். யூக்லிட்டில் ஆரம்பித்து ஸ்டீபன் ஹாக்கிங் வரை அறிவியல் வரலாற்றில் தடம் பதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: இந்தியாடுடே, 26/3/2014.
—-
வண்டாடப் பூ மலர, பேரா. முனைவர் ம.பெ. சீனிவாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 125ரூ.
ஐம்பது கட்டுரைகளைக் கொண்ட கருத்துப் பெட்டகம் இந்நூல். கட்டுரை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பொருளை மையமாகக் கொண்டு விளக்கும் முறை என்று கட்டுரைத் தலைப்புகட்கு ஏற்ப திருக்குறள், அகநானூறு, சிலப்பதிகாரம், வில்லிபாரதம், கம்பராமாயணம், ஆழ்வார்களின் பாசுரங்கள் முதலியவற்றிலிருந்து, செய்யுட்பகுதிகளை எடுத்துக்காட்டி, ஒப்பிட்டு விளக்கும் முறை, பாராட்டுக்குரியது. முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்பு. ஐம்பால், ஐ, நப்பின்னை, மாலை சூட்டிய மாலை முதலிய எல்லாக் கட்டுரைகளும், நூலாசிரியரின் ஆழ்ந்தகன்ற புலமையை வெளிப்படுத்துகின்றன. -பேரா., ம.நா.சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 23/3/2014.