சிங்கப்பூரில் தமிழ் தமிழர்
சிங்கப்பூரில் தமிழ் தமிழர், சௌந்தர நாயகி வயிரவன், குமுதம் பு(து)த்தகம், பக். 96, விலை 100ரூ.
சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஆதிகால உறவு தொட்டு, இக்கால சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்வியல் வரையான ஒரு சிறப்புப் பார்வை இந்நூல். சிங்கப்பூரில் நான்கு ஐந்து தலைமுறைகளாக வாழும் சிங்கப்பூர் தமிழர்கள் பற்றிய பதிவுகள் கவனம் பெறுகின்றன. இன்றைய சிங்கப்பூர் தமிழர்கள் பற்றிய ஒரு புரிதலுக்குத் துணை நிற்கும் நூல் இது. இந்நூல் ஆசிரியர் சௌந்தர நாயகி வயிரவன் சிங்கப்பூர் ஓர் முழுமையான பார்வை என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குமுதம் தீராநதியில் வெளிவந்த தொடர் கட்டுரைகள்தான் இப்போது நூலாக முழுவடிவம் பெற்றுள்ளன. நன்றி: குமுதம், 17/9/2012.
—-
இராமானுசரின் சீர்திருத்தச் சிந்தனைகள், திருவள்ளூர் எம்.என். செல்வராஜ், என் மனோன்மணி ஜெய் ஸ்ரீ அன்விகா புத்தக வெளியீட்டாளர்கள், 4, முதல் தெரு, கே.கே. நகர், மணவாள நகர், திருவள்ளூர் 2.
இராமானுசரின் சமூக விழிப்புணர்வு, வர்ணப் பகுப்பு, தாழ்த்தப்பட்ட மக்களின் சம உரிமைக்காக அவர் பாடுபட்டது. சனாதன கொள்கைகைள எதிர்த்து அவர் நடத்திய போராட்டங்கள், அதனால் அவர் பட்ட இன்னல்கள் என்று இராமானுசரின் சமூக சீர்திருத்தங்களைத் தொகுத்துத்தரும் அரிய நூல். இறைவன் முன் அனைவரும் சமமே என்ற இராமானுசரின் துணிவை வெளிப்படுத்தும் விதமாக நூல் அமைந்துள்ளது. நன்றி: குமுதம், 17/9/2012.