அகம் புறம் அந்தப்புரம்
அகம் புறம் அந்தப்புரம், முகில், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2, போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 999ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-3.html ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, சமீப காலம் வரை இந்தியாவின் பல சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்கள், அவர்களது நிஜ அந்தப்புர வாழ்க்கை ஆகியவை அப்படியே படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது. தான் விரும்பிய ஒரு பெண்ணை மஞ்சத்தில் வீழ்த்த ஒரு மகாராஜா செய்த தகிடுதத்தங்கள், வளர்ப்பு நாய்க்கு ஆடம்பர திருமணம் நடத்தியவர், மன்னரை ஏமாற்றி கள்ளக்காதலில் ஈடுபட்ட மகாராணி, இப்படி பல சுவாரசியமான உண்மை நிகழ்வுகள், வறட்சியான வார்த்தைகளில் இல்லாமல் நகைச்சுவை வரிகளுடன் கோர்த்து தரப்பட்டுள்ளதால் இந்த மாபெரும் புத்தகத்தை சலிப்பு தட்டாமல் படிக்க முடிகிறது. புதுக்கோட்டை, மைசூர், ஐதராபாத் உள்பட அனைத்து சமஸ்தான மகாராஜாக்களின் பிரமிப்பூட்டும் வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 26/3/2014.
—-
மகாபாரதத்தில் கிருஷ்ணன், ஆ.கிருஷ்ணன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 200ரூ.
மகாபாரதத்தில் வரும் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களில், கிருஷ்ணன் மிக முக்கியமானவர். கிருஷ்ணன் இல்லையேல் மகாபாரதம் இல்லை. மகாபாரதத்தில் கிருஷ்ணன் என்னென்ன செய்தார் என்பது இந்த நூலில் தெளிவாகவும், அழகாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படித்தாலே, மகாபாரதத்தைப் படித்த திருப்தி ஏற்படும். ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் பிறந்தார் என்பது போன்ற நுட்பமான விஷயங்கள் நூலில் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/3/2014.