நாட்டுக்கோட்டை நகரத்தார்
நாட்டுக்கோட்டை நகரத்தார், சீத்தலை சாத்தன் (சுப்ரமணிய வெங்கடாச்சலம்), ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதலாவது தெரு, அசோக்நகர், சென்னை 83, விலை 500ரூ.
நகரத்தாரின் வழிபாடு, வாழ்க்கை முறை, கல்வி, அரசியல், தொழில், பழக்க வழக்கங்கள், திருமண முறைகள் குறித்த அபூர்வ தகவல்கள் தொகுக்கப்பட்ட நூலாகும். இதில் நகரத்தார் வீடுகள், கோவில்களின் வண்ணப்படங்கள் அழகுற பிரசுரிக்கப்பட்டு உள்ளன. நகரத்தார் ஊர்களின் வரைபடம், தபால் நிலையங்களின் எண்ணங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் நகரத்தார் அடிக்கடி பிறந்த மண்ணுக்கு வரவேண்டும் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தார் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியிளர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளதுடன், வரலாற்றைச் சொல்லும் காலப் பெட்டகமாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 19/3/2014.
—-
அதிர்ஷ்டம் தரும் நவரத்தின கற்கள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ.
நவரத்தின கற்களை மோதிரத்தில் பதித்து அணிவது அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்று கருதப்படுகிறது. எந்த ராசிக்கு எந்தக் கல்லை அணியவேண்டும், எதை அணியக்கூடாது என்று விளக்குகிறது இந்நூல். ராசிக்கற்கள் பற்றிய முழு விவரங்களையும், விளக்கமாகத் தந்துள்ளார் நூலாசிரியர் சாகம்பரி தாசன். நன்றி: தினத்தந்தி, 19/3/2014.
—-
விஜயாவின் நவீன பஞ்சாங்கம், என். நாராயணராவ், விஜயா பப்ளிகேஷன்ஸ், 317, என்.எஸ்.கே. சாலை, வடபழனி, சென்னை 26, விலை 25ரூ.
ஏப்ரல் 14ந்தேதி புத்தாண்டு (ஜய வருடம்) பிறக்கிறது. இதையொட்டி விஜயா பதிப்பகம் ஜய வருட விஜய வழிகாட்டி என்ற தலைப்பில் 2014-15ம் ஆண்டுக்குரிய நவீன பஞ்சாங்கத்தை வெளியிட்டுள்ளது. இதில் 12 ராசிகளுக்கான ஆண்டு பலன்கள், விசேச நாட்கள், வீடு கட்ட உகந்த காலம் முதலான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/3/2014