தமிழர் தளபதிகள்
தமிழர் தளபதிகள், புலவர் கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html
பண்டைத் தமிழ் மன்னர்கள் என்றாலே சில பிரபலமான பெயர்கள்தான் நம் ஞாபகத்துக்கு வரும். அவர்களைத் தவிர, வீரதீரம் காட்டிய எண்ணற்ற வீரர்கள் இருந்திருக்கின்றனர். அவ்வாறு தமிழ் மரபில் தோன்றி, தங்கள் வீரத்தால் பெருமை பெற்ற அதியன், குதிரைமலைப் பிட்டன், கோடைப் பொருநன், திருக்கண்ணன், திருக்கிள்ளி போன்றோரைப் பற்றி வரலாற்று விவரங்களுடன் விவரிக்கிறார் நூலாசிரியரான புலவர் கா. கோவிந்தன். தமிழரின் வீரப் பாரம்பரியத்தை இந்நூல் வெளிக்காட்டும். நன்றி: தினத்தந்தி.
—-
இரண்டு வரி காவியம், ரம்யா பிரியா கிரியேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ.
மனிதனால் மனிதனுக்கு சொல்லப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி நூல் திருக்குறள். இந்நூலுக்கு எத்தனையோ இலக்கிய ஜாம்பவான்கள் முதல் ஏகப்பட்ட புலவர்களும், தமிழ் ஆர்வலர்களும் விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். ஆயினும் இன்னும் எளிமையாக சொல்ல முடியுமா என்கிற முயற்சியின் உந்துதலால் எழுதப்பட்டதே இந்த இரண்டு வரி காவியம். ஒவ்வொரு குறளுக்கும் தனித்தனி விளக்க உரை தந்ததோடு, பத்து குறள்களின் மொத்தக் கருத்தையும் தொகுத்துத் தரவும், அதையே இன்னும் ஜுஸ் செய்து மிகச் சுருக்கமாகச் சொல்லவும் 133 அதிகாரங்களுக்கும் இரண்டே வார்த்தைகளில் வள்ளுவன் நீதி என்று தலைப்பிட்டும் படைத்திருக்கிறார் நூலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர். மொத்தத்தில் இந்த நூல் மிக எளிமையாக எல்லோருக்கும் சுலபமாக புரியும்படியாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி.
—-
போஜராஜன், மு. ஸ்ரீனிவாசன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 70ரூ.
11ம் நூற்றாண்டில் மாளவ தேசத்தை ஆண்ட மன்னன் போஜராஜன், ஆட்சித் திறத்துடன், அந்தக் காலத்திலேயே விமானம், போர்க் கப்பல்கள் போன்றவற்றை நிர்மானம் செய்யும் ஆற்றல் பெற்று, கலை இலக்கிய காப்பாளனாகவும் பன்முகம் கொண்டு வாழ்ந்த அதிசய வரலாறு படிக்க விறுவிறுப்பாக இருக்கிறது. நன்றி: தினத்தந்தி