மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள்
மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை 12, விலை 90ரூ.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அவர் எந்தெந்த மன்னர்களுக்கு கடிதங்களை அனுப்பினார்? அந்தக் கடிதங்களை யார் கொண்டு சென்றார்கள்? அவற்றுக்கு அந்த மன்னர்களின் எதிர்வினைகள் எப்படி இருந்தன என்பதை நாடகவடிவில் மவுலவி கே.ஜே. மஸ்தான் அலீ பாக்கவி எழுதிய நூல். நாடக வடிவில் எழுதப்பட்டிருப்பதால் விறுவிறுப்பாகவும், படிப்பதற்கு சுவையாகவும் இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 21/5/2014.
—-
தாயெனும், சீனிஷாஹ், ஹமீதா பதிப்பகம், ராமநாதபுரம் மாவட்டம், விலை 35ரூ.
தாய்மையின் மேன்மை குறித்து 20 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.
—-
தேடுபவன் அடைகிறான் தட்டுபவனுக்கு திறக்கப்படுகிறது, தில்லி. இரா. வைத்தியநாதன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு நூல். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனஉறுதி மூலம் எதையும் சாதிக்க முடியும் என்கிறது இப்புத்தகம். நன்றி: தினத்தந்தி, 21/5/2014.