சந்திரசேகரம்
சந்திரசேகரம், திருமகள் நிலையம், சென்னை, விலை 175ரூ.
காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளைப் பற்றி எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் எழுதியுள்ள நூல் சந்திரசேகரம். மிகச் சிறந்த ஞானிக்கு இலக்கணமாகவும், சன்யாசிக்கு இலக்கணமாகவும், மனிதருக்கு இலக்கணமாகவும் வாழ்ந்தவர் காஞ்சி பெரியவர். அவருடைய ஆருளுரைகளை அடிப்படையாகக் கொண்டு ஆன்மிக விளக்கங்களையும், பெரியவரின் பெருமைகளையும் அவர் நிகழ்த்திய அற்புதங்களையும் அழகிய முறையில் எடுத்துக்கூறுகிறார். காஞ்சிப் பெரியவரை பார்க்காத-அவரைத் தரிசிக்க வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு பெரியவரின் உன்னத பண்புகளை எடுத்துக்கூறி ஒரு உண்மையான துறவியை-மகானை அடையாளம் காட்டுகிறார். இந்த நூலைப் படிக்கும்போது ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 18/6/14.
—–
காமராஜ் ஒரு சரித்திரம், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பலர் எழுதி இருக்கிறார்கள். காமராஜருடன் நெருங்கிப் பழகியவரான அவரது தோழர் முருக தனுஷ்கோடி எழுதிய இந்தப் புத்தகம் தனிச்சிறப்பு வாய்ந்தது. காமராஜர் வாழ்க்கையில் நடைபெற்ற மனதைத் தொடுகின்ற-உணர்ச்சிமயமான நிகழ்ச்சிகள் இந்நூலில் நிறைந்துள்ளன. இப்போது நவீன வடிவமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 18/6/14.