மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அமுதமொழிகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவின் அமுதமொழிகள், இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9.
ஒரு காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு யாரும் எந்த உதவியும் இலவசமாகத் தர வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது. தமிழக மக்கள் யாரிடத்திலேயும் கையை நீட்டிப் பெறுகின்ற நிலை இருக்கக்கூடாது. அதை எனது வாழ்நாளில் நான் காண வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அதுதான் என் லட்சியம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இது போன்ற பல்வேறு உணர்ச்சிமயமான கருத்துகளைத் தொகுத்து தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் அமுதமொழிகள் என்ற நூலாகத் தமிழக அரசு நிறுவனமான தமிழரசு வெளியிட்டுள்ளது. மொழி, கல்வி, இலக்கியம், ஆன்மிகம், பொருளாதாரம், மகளிர் மேம்பாடு மற்றும் அரசியல் போன்றவை குறித்து முதல்வரின் சிந்தனைப் பூங்காவில் மலர்ந்த வாசமிகு மலர்கள் இவை என்று பதிப்புரையில் சொல்கிறார் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மூ. ராஜாராம். இதுபோல், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடங்கித் தமிழக மீனவர்கள் பிரச்சினை வரை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக தரப்பு நியாயங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் எழுதிய கடிதங்களையும் (ஆங்கிலம்) வரிசையாகத் தொகுத்துத் தனி நூலாகத் தமிழரசு வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பலரும் அறிந்திராத புள்ளிவிவரங்களைக் காணமுடிகிறது. மத்திய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைப் எப்படி முடக்க முடியும் என்பதும் இலைமறை காயாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரிசையில் தமிழ்நாடு முதல்வரின் எழுச்சிமிக்க உரைகள்-தொகுப்பு-3 (ஆங்கிலம்), தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் எழுச்சிமிகு உரைகள் தொகுப்பு-5 மற்றும் தொகுப்பு-6(தமிழ்), தமிழக அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் (ஆங்கிலம் மற்றம் தமிழ்) மற்றும் மூன்றாண்டு ஆட்சி, முழுமையான வளர்ச்சி ஆகிய நூல்களும் மேற்சொல்லப்பட்ட நூல்களுடன் சேர்த்து கடந்த மாதம் (மே 2014) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய பல சுவையன உரைகளும் அடக்கம். -சசிதரன். நன்றி: தி இந்து, 11/6/2014.