சார்வாகன் கதைகள்
சார்வாகன் கதைகள், சார்வாகன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 544, விலை 400ரூ.
சார்வாகனின் 41 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் கொண்ட தொகுப்பு. சார்வாகன் எழுத்தாளர் மட்டுமல்ல. தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவைச்சிகிச்சைத் துறையில் உலகப் புகழ்பெற்ற மருத்துவரும் ஆவார். இந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். இவரின் எழுத்து வன்மை தொடர்பாக அசோகமித்திரன், மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே.கிரானின், சாமர் செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன் வரை கூறலாம் என்று கூறியுள்ளார். எளிய மனிதர்களை எளிய சொற்களால் சிலந்தி வலை பின்னுவதைப்போன்று படம் காட்டுவது சார்வாகனின் இயல்பு. ஆனால் சார்வாகனின் வலை என்பது நம் மனதில் இருந்து எளிதாக பிரிக்க முடியாது. 1960-70காலகட்ட மனிதர்களின் வாழ்க்கைச்சூழல் நெருக்கடிகள், மகிழ்ச்சிகள், நுண்உணர்வுகள் என அனைத்தும் ரத்தமும் சதையுமாக பின்னப்பட்ட நரம்புகளே புத்தகம் முழுக்க வரிகளாக ஓடுகின்றன. உணர்வுகளின் உறைவிடம் இந்நூல். நன்றி: தினமணி, 16/6/14.
—-
அரசு பதில்கள் 1980, குமுதம் பு(து)த்தகம், சென்னை, விலை 150ரூ.
குமுதத்தின் அடையாளமே அரசு பதில்கள்தான். ஜாலியான கிண்டலான, அறிவான அரசு பதில்கள் 1980ம் ஆண்டில் குமுதத்தின் வெளிவந்ததன் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், 19/6/2014.