உலக அரசியல்

உலக அரசியல், சுப்பிரமணியன் சந்திரன், பாரதி புத்தகாலயம்.

தன்னலம், சமுதாய நலம், தேசிய நலன் ஆகியவற்றை கடந்து, ஓர் உலக அரசியலுக்கு இலக்கணம் தேடும்வகையில், தத்துவ அறிஞர்கள் சிந்தித்தனர். ஆனால், நடைமுறையில் இந்த நலன்களை பலப்படுத்தும் திட்டமிட்ட நிகழ்ச்சியே உலக அரசியலாக மாறியுள்ளது. தேசிய நலனையும், தேசிய நலனுக்காக சமுதாய நலனையும், சமுதாய நலனுக்காக தன்னலத்தையும் துறந்துவிட முடியுமா என்ற கேள்வி, முக்கியத்துவம் வாய்ந்ததாக நம்மிடத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்த நூலில், இந்திய விடுதலை, முதல் உலகப்போர், இரண்டாம் உலக போர், அமெரிக்க விடுதலை, இங்கிலாந்து புரட்சி, ரஷ்ய புரட்சி, சீன புரட்சி, அணு ஆயுத ஒழிப்பு, உலக அரசியலில் இந்தியா போன்ற எண்ணற்ற அரசியலை உள்ளடக்கிய நூலாக அமைந்துள்ளது. உலக அமைதியை ஏற்படுத்தும் அவசியம், உலக அரசியலுக்கு உண்டு. இவ்வாறு, பல கேள்விகளும், உலக அரசியலை புரிந்து கொள்ள வைக்கும் இந்த நூலின் விலை 200ரூ. எழும்பூர், கன்னிமாரா நூலகம் உட்பட பல நூலகத்தில், இந்த நூல் வாசிக்க கிடைக்கிறது. நன்றி: தினமலர், 31/8/2014.  

—-

ஸ்ரீபவானி சஹஸ்ரநாமம், தமிழ்மாறன், ஸ்ரீ மாமேரு டிரஸ்ட், பக். 358, விலை 250ரூ.

சமஸ்கிருதமும், காஷ்மீரும், தனி அந்தஸ்தும், தனிப்பெருமையும் இனியும் பெற வேண்டுமா? என்ற விவாதத்திற்கு விடை தருவதுபோல், இந்த நூல் வெளிவந்துள்ளது. சமஸ்கிருத சகஸ்ரநாமத்தை செந்தமிழ் விரிவாக விளக்கி உயர்த்தி உள்ளது. சக்தி உபாசகர்களால் போற்றப்பட்டு 300 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் பண்டிட் சாகிப்கால் எழுதிய ஸ்ரீபவானி சகஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களுக்கு அழகிய தமிழில் விளக்கம் தந்துள்ளார், அருளிசைக் கவிச்செல்வர் தமிழ்மாறன். இந்த நூல் ருத்ர யாமள தந்திரத்தில், நந்திகேசுவரனுக்கு சிவபெருமான் உரைத்த உபதேசமாக, நாமாவளி தொகுப்பாக அமைந்துள்ளது. பவன் என்றால் சிவன், அவரது சக்தி பவானியின் சிறப்பை நூல் முழுவதும் விளக்கி, சாக்தத்தின் சிகரமாக இந்நூலைச் செதுக்கி உள்ளார் ஆசிரியர். கம்பர், திருமூலர், அபிராமிபட்டர், பாரதியார் ஆகியோர் கவிதைகளுடன், தன் கவிதையையும் சேர்த்து விளக்கம் எழுதி, சமஸ்கிருதத்தை இனிக்கும் செந்தமிழ் ஆக்கி உள்ளார். நந்தா (பக். 53), ஆனந்தம் ஆனவள் என்று விளக்கி உள்ளார். ஆனால் மறையாத என்ற பொருளில் கம்பர், நந்தா விளக்கனைய நாயகன் என்று கூறியுள்ளார். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 31/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *