இனி ஒரு வலியில்லா பயணம்

இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீமகாதேவன், சூரியா கம்யூனிகேஷன், பக். 56, விலை 50ரூ.

நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ஒன்றும் செய்ய முடியாது என டாக்டர் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியாலும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை பொங்கும் துன்பத்த்லும் நோயாளிகள் துவண்டுவிடுகின்றனர். அத்தகையோருக்கு, மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த நிலையில் அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்ற வலி தணிப்பு சிகிச்சை பாலியேட்டிவ் கேர் தேவை. மேலை நாடுகளில் இந்த வகை சிகிச்சை முறை பிரபலம் என்றாலும், நம் நாட்டில் பெரிய விழிப்புணர்வு இல்லை. இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இனி ஒரு வலியில்லா பயணம் என்ற நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதைகள் வழியாக புற்றுநோயாளிகளின் அவதியை விவரித்துள்ள அவர், மரணத்தின் பிடியில் உள்ளோரின் கோபத்துக்கு இதமும், அன்பும்தான் தேவை என்கிறார். எளிய நடையில் உள்ளதால், இந்த நூல் வலி தணிப்பு சிகிச்சை குறித்த விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்தும். அதே நேரத்தில் பக்கத்தை வரிசைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தவிர்த்திருக்கலாம். -ஆர். குமார். நன்றி: தினமலர், 26/10/2014.  

—-

 

புகழ்பெற்ற பொன்மொழிகள், எஸ். தமயந்தி, கவுரவ ஆசிரியர்- வழக்கறிஞர் எஸ். சேசாச்சலம், சுவாமிமலை பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.

தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோரின் பொன்மொழீகள் கொண்ட புத்தகம். சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிறந்த நூல். நன்றி; தினத்தந்தி, 22/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *