நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு
நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ.
To buy this Tamil book online:https://www.nhm.in/shop/100-00-0002-338-0.html பொதுமக்கள் பொருட்கள் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பதற்கும், அப்படி ஏமாற்றப்பட்டால் அதற்கு தீர்வு காண்பது எப்படி? எங்கே முறையிடுவது? தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள், தொலைபேசி எண்கள், நுகர்வோர் நீதிமன்றங்கள், தமிழகத்தில் உள்ள தன்னார்வ நுகர்வோர் மன்றங்கள் முதலான விவரங்கள் கொண்ட பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.
—-
மெழுகாய் கரையும் பெண்மைகள், வானதி பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-338-3.html உயிரே உருகாதே, மற்றும் மெழுகாய் கரையும் பெண்மைகள் என்ற இரு குறுநாவல்களை ஒரே புத்தகத்தில் வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப உள்ளத்தை விட்டு நீங்காத கருத்துக்களோடு, மெழுகாய் செதுக்கி உள்ளார் ஆசிரியர். ஸ்ரீஜா வெங்கடேஷ். பெண்களின் பிரச்சினைகளை மையமாக்கி, அதை கதையாக வடிவமைத்திருக்கும் விதம் சிறப்பானது. ஒரு குறுநவாலில் பணம் ஒரு குடும்பத்தில் என்ன பிரச்சினைகளை எல்லாம் கொடுக்கிறது என்பதை சுவையாக சொல்லி இருக்கிறார். தாய் மகன் இடையே ஏற்படும் பிரிவினைக்கு சுமுகமான முறையில் தீர்வு கொடுக்கும் கதையை இன்னொரு குறுநாவலில் விறுவிறுப்பாக எடுத்து சொல்கிறார். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.