இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

இந்தப் பிறவியில் இவ்வளவுதான், கமலாதாஸ், தமிழில் மு.ந.புகழேந்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 180, விலை 135ரூ.

மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற கமலாதாஸின் படைப்புகள் அனைத்துமே உயிரோட்டமானவை. அன்றாடம் ஏதாவது ஒரு மூலையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அவை அமைந்திருக்கும். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள குறுநாவல்கள், சுயசரிதை, சிறுகதைகள், கவிதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. காலங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மன்னிக்க முடியாத பாவமா காதல்? இந்த மகளை மன்னித்து விடுங்கள் ஆகிய படைப்புகள் வெளிப்படுத்தும் யதார்த்தம் நம்மை வியக்க வைக்கிறது. பசியுள்ளவனை அழைக்காத இஃப்தார் விருந்துகள், நிர்வாண உடல்கள், சுயம்பவரம், திருநங்கைகள், தரிசு நிலம் ஆகியவற்றின் மூலம் இந்த சமுதாயத்தில் நிலவும் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளன. இவை தவிர, முகமில்லாத கப்பல் தலைவன், மலைச் சரிவுகளில், மதில்கள், புது அம்மா என தொகுக்கப்பட்டுள்ள அனைத்துப் படைப்புகளும் அற்புதம். வாழ்க்கையைப் பற்றிய பொதுவான சமூக மதிப்பீடுகளிலிருந்து மாறுபாட்டதும் வித்தியாசமான கோணத்தில் பார்த்ததுமான கருத்துகள் இந்நூலில் உள்ள எல்லாப் படைப்புகளிலும் விரவிக்கிடக்கின்றன. பெண்களுக்கு அவர்கள் பெண்கள் என்பதாலேயே இழைக்கப்படும் கொடுமைகள், வன்முறைகள் மிகவும் உயிரோட்டமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கதைகளில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்களின் மனதில் அதிர்ச்சியையும் வலியையும் ஏற்படுத்துகின்றன. எளிய, இனிய பிசிறில்லாத மொழிபெயர்ப்பு, மூல நூல்களைப் படிப்பதைப்போன்ற உணர்வுப்பூர்வமாகவும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கதைகளில் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்களின் மனதில் அதிர்ச்சையும், வலியையும் ஏற்படுத்துகின்றன. எளிய, இனிய பிசிறில்லாத மொழி பெயர்ப்பு, மூல நூல்களைப் படிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துவதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நன்றி: தினமணி, 3/11/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *