மறுபடியும்
மறுபடியும், கனகராஜன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-194-6.html இன்னும் சிநேகம் இருக்கிறது தினமணி கதிர், கல்கி, தினமலர், இதயம் பேசுகிறது போன்ற ஜனரஞ்சக பத்திரிகைகளில் சுமார் 20 வருடங்கள் வெளியிடப்பட்ட எழுத்தாளர் கனகராஜன் கதைகளின் தொகுப்பு இந்த மறுபடியும். விளிம்பு நிலை அல்லது அதைக் கொஞ்சம் தாண்டிய சராசரி மனிதர்களின் துயரங்களே இந்தக் கதைகள். பால்ய கனவுகளை இழந்து டீக்கடை கிளாஸ்களை கழுவும் சிறுவர்கள், பணத்துக்காக சொத்துக்காக சொந்த அம்மாக்களை புறந்தள்ளும் மகன்கள், மருமகளை ரணப்படுத்தி சாவின் அணைப்புக்காக காத்திருக்கும் மாமியார்கள், அற்ப தொகையை கடனாக வாங்கிக்கொண்டு சாமர்த்தியமாக ஏமாற்றும் நண்பர்கள், கைக்காசை இழந்து லட்சிய வேள்வியில் வாழ்க்கையை இழந்து தவிக்கும் சிற்றிதழ் நடத்தும் மதுபாலன்கள் இப்படி தினது தினுசான மனிதர்கள் இங்கே அலைகிறார்கள். ஈரம் கொண்ட மனதையும், மனிதாபிமானம் சுமக்கும் இலக்கையும், சிநேகத்தால் அரவணைக்கும் எழுதுகோலையும் வைத்துக்கொண்டு கோலங்கள் போட்டிருக்கிறார் கனகராஜன். பெரும்பாலும் ஒரே அச்சில் சுழலம் கோலங்கள். நன்றி: அந்திமழை, 1/11/2014.
—-
பிரியங்களின் அந்தாதி, இவள் பாரதி, முகவரி வெளியீடு, சென்னை, விலை 120ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-225-1.html கவிஞர் இவள் பாரதியின் ஏழாவது தொகுப்பு பிரியங்களின் அந்தாதி. தன்னைச் சுற்றி நடப்பவற்றை விமர்சனமாகப் பார்ப்பது, சூழல் மீது அக்கறைகள் கொள்வது, காதலின் அக உணர்வுகளை, புற உணர்வுகளைப் பதிவு செய்வது, சக மனிதர்கள் உடனான உறவுகள், குடும்பம், நட்பு பற்றிய பிரத்யேகப் பார்வைகள், சுய வலிகள் என நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகின்றன இக்கவிதைகள். தாத்தாவுக்கு காதல் கவிதைகள் எழுதினால் பிடிப்பதில்லை தம்பிக்குக் கவிதைகளே பிடிப்பதில்லை தங்கைக்கு எப்போதாவது பிடிக்கும் அப்பாவுக்கு எப்போதும் பிடிப்பதில்லை அம்மாவுக்கு எழுத்தைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லை இப்படியான நிலையில் கவிஞராக இருப்பது ஒரு சாபமே போன்ற கவிதைகள் உள்ளன. நன்றி: அந்திமழை,1/4/2014.