மொழிப்போர் மறவர்
மொழிப்போர் மறவர், வெளியிட்டோர் ஊர்ச் செய்தி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
தமிழைப் போற்றியி தகைமையாளர்கள் சிலரின் வாழ்க்கை வரலாற்றினை சுருக்கமாக தொகுத்தளிக்கிறது இந்நூல். தனித் தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், ச.சோமசுந்தர பாரதியார், தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் உள்பட 14 தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்தளித்திருக்கிறார் ஓவியப் பாவலர் மு. வலவன். இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியும், அதில் இந்த சான்றோர்களின் பங்களிப்புப் பற்றியும் அறிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/10/2014.
—-
எழுத்தால் எழுதுவோம், புன்னகை பதிப்பகம், திருநெல்வேலி, விலை 100ரூ.
ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு தமிழ் எழுத்தை முக்கியப்படுத்தி, தமிழிலுள்ள 247 எழுத்துக்களையும் பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு நூல். கவிதைகளில் குடும்ப உறவு, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியன பற்றி மாணவர்களுக்கு அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் மருத்துவர் க. புனிதவதி. நன்றி: தினத்தந்தி, 15/10/2014.