தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4
தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4, (விஞ்ஞானி பைரவ் தந்த்ராவின் புதிய விளக்கம்), ஓஷோ, தமிழில் தியான் சித்தார்த், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 624, விலை 300ரூ.
தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள தந்த்ரா உலகம் என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான் பைரவ் தந்த்ரா என்ற வார்த்தைகளின் பொருள் உணர்வு தாண்டிப் போகும் யுக்தி. விஞ்ஞான் என்றால் உணர்வு. பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. தந்த்ரா என்றால் யுக்தி, வழி, முறை, டெக்னிக். எனவே இது விஞ்ஞானப்பூர்வமானது. விஞ்ஞானம் ஏன் என்பதில் அக்கறையுடையதல்ல எப்படி என்பதில் அக்கறையுடையது என்று விளக்கமளிக்கிறது தந்த்ரா உலகம். உனக்குப் பொருந்துகின்ற ஓர் உத்தியைத் தேர்ந்தெடு. உன் முழு சக்தியைஹயும் அதில் கொடு. அதன்பின் நீ பழைய ஆளாகக் கண்டிபாக இருக்க மாட்டாய். மனம் எங்கு இல்லையோ அதுவே பைரவ்வின் நிலை மனமற்ற நிலை. உனக்குக் குறைவாகத் தெரிந்த அளவு மிகவும் நல்லது. வாழ்வு ஓர் அற்புதம். நீ அதன் புதிரை அறியவில்லை என்றால் அதை எப்படி அணுகுவது என்பதை நீ அறியவில்லை என்பதையே காட்டுகிறது என்கிறது தந்த்ரா. உணர்வோடு கூடிய செயல்பாடு, வேர் நோக்கி நகர்தல், இறப்பிலிருந்து இறவாமைக்கு, நீ எங்கும் இருக்கிறாய், உன்னிடமிருந்து உனக்கு விடுதலை, கர்மாவைக் கடந்து போ முதலிய பதினாறு இயல்கள் மூலம் தந்த்ராவின் பதில்கள் (யுத்திகள்) அமைகின்றன. இதில், இப்பிரபஞ்சம் முழுவதையும் நமது தலைக்குள் உணர்வது, நம்மை ஒளியாக நினைவு கொள்வது, உள்ளிருக்கும் இருளை வெளியே கொண்டு வருவது, தூய்மையான கவனத் தன்மையை வளர்த்துக் கொள்வது, நெருப்பின் மேல் கவனத்தைக் குவிப்பது, நம் ,உடலிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வது, நெருப்பின் மேல் கவனத்தைக் குவிப்பது, நம் உடலிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வது, இருளுக்குள் கரைந்து போவது, சிந்திக்காமல் உணர்ந்து பார்ப்பது, கற்பனை செய்ய முடியாததை எல்லாம் கற்பனை செய்வது, நாம் இருக்கிறோம் என்பதை உணர்வது என நிறைய தியான யுத்தகள் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினமணி, 14/11/2014.