திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு
திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு, வக்கீல் செ. வந்தகுமாரி செல்லையா, டாக்டர் ஏ.இ. செல்லையா கல்வி அறக்கட்டளை, சென்னை, விலை 250ரூ.
திருக்குறளை ஆராய்ந்து அதில் பல அறிஞர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொகுத்து தனது கருத்துக்களையும் இணைத்து அரிய நூலாக எழுதியுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வள்ளுவத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் எளியநடையில் தொகுத்துள்ளார். இந்த நூலைப் படிப்பதன் மூலம் திருக்குறள் பற்றி அறிந்த கருத்துக்களை ஆழப்படுத்திக் கொள்வதுடன், அறியாதவற்றை அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட பயனுள்ள நூலாகும். நன்றி: தினத்தந்தி, 15/10/2014.
—-
ஸ்ரீமத் பாகவத சுலோகங்கள், என். நாராயணன், விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 30ரூ.
மகாபாரத போர் முடிந்ததும், பாண்டவர் ஆட்சிக்கு வந்தனர். பிறகு மன்னர் ஆனவர் பரிட்சித்து, இவர் அபிமன்யுவின் மகன். குருசேத்திர யுத்தம் முடிந்து 36 பருடத்தில், கலியுகம் பிறப்பதற்கு முதல் நாள் இவருக்கு தருமர் பட்டம் சூட்டினார். வேத வியாசர் இயற்றிய பாகவத புராணத்தை பரிட்சித்து உபதேசித்தவர் சுகப்பிரம்மரிஷி. இதில் பல அபூர்வ கருத்துக்கள் அடங்கியுள்ளன. மூல நூலில் இருந்து முக்கியமான சுலோகங்கள் எளிய தமிழ் உரையுடன் கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 15/10/2014.