சாகசக்காரி பற்றியவை
சாகசக்காரி பற்றியவை, தான்யா, வடலி வெளியீடு, சென்னை, விலை 50ரூ.
புலம் பெயர்ந்து கனடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வாழும் கவிஞர் தான்யாவின் கவிதைநூல். புலம் பெயர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளே கதைகளின் மையக்கரு. பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றி தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் சுற்றவைக்கிறது என்பதை பதிவு செய்ததோடு அச்சூழலில்லிருந்து வெளிவர போராடிக் கொண்டிருக்கும் சாகசக்காரிகளைப் பற்றிய கவிதைகள் இவை. குடும்பம், குடும்ப உறவுகளுடனான போரே இதன் பாடுபொருளாகியிருக்கிறது. பேராற்றல் மிக்க பெண்களை குடும்ப அமைப்பு எவ்வாறு சிதைத்துப் போடுகிறது என்பதே கவிதைகளின் உயிர்நாடி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/12/2014.
—-
பார் பரவும் பராசக்தி, பேராசிரியர் செ. வைத்தியலிங்கம், தமிழன்னை பதிப்பகம், சிதம்பரம், விலை 65ரூ.
சக்தியில்லையேல், சிவமில்லை என்பது சான்றோர் வாக்கு. சக்தி என்ற சொல்லுக்குத் திறமை, ஆற்றல் என்று பொருள். சக்தியை பல வடிவங்களில் வழிபடுவது தமிழர்களின் மரபு. சக்தியினை வழிபடுவதால் அவளுடைய அருள் நமக்கு கிடைத்து நாம் வளமுடன் வாழ முடியும். இவ்வாறு சக்தியின் பெருமையை பரப்பும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/12/2014.