முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ. நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், பக். 96, விலை 100ரூ.

முதுமைப் பருவம் நம் வாழ்க்கைப் பயணத்தில் இயல்பானதுதான். ஆனால் நம் மனம், முதுமைப் பருவத்தை மட்டும் வேண்டா வெறுப்பாகத்தான் ஏற்றுக்கொள்கிறது. முதுவையில் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளும், இந்த பருவத்தில் மரணம் குறித்து உண்டாகும் பயமும்தான் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கக்கூடும். முதுமையில் ஏற்படும் உடல், மனரீதியான பிரச்னைகளுக்கான தீர்வுகளையும், மரண பயத்தை வெல்வதற்கான சூட்சுமங்களையும் உள்ளடக்கிய நூல்தான் இது. முதுமையில், சர்க்கரை நோய், உயர் தத்த அழுத்தம், மூட்டு வலி, ஞாபக மறதி, தூக்கமின்மை போன்ற உடல்ரீதியான பல்வேறு இன்னல்கள் வராமல் தடுப்பது எப்படி? மனதை வளமாக வைத்துக்கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் எவை? மரண பயத்தை வெல்ல பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எவை? மரண பயத்தை வெல்ல பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எவை? என்பன குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நூலின் ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும், வாழ்வின் மீது முதியோருக்கு நம்பிக்கை யூட்டும் வகையில், முதுமை குறித்த அறிஞர் பெருமக்களின் பொன் மொழிகள் இடம்பெற்றுள்ளது சிறப்பு. நம் அனைவரின் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 15/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *