குரல்வளையில் இறங்கும் ஆறு

குரல்வளையில் இறங்கும் ஆறு, அய்யப்ப மாதவன் சாய் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 120, விலை 100ரூ.

அய்யப்ப மாதவனின் சமீபத்திய தொகுப்பு குரவளையில் இறங்கும் ஆறு. கவிதைக்கான தனியான பிரயத்தனங்களை அய்யப்ப மாதவன் கொண்டிருக்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் உறங்கிவிட்ட இரவில் ஒரு நாளை, அதுவரையிலான தன் வாழ்வை நினைத்து உறங்காமல் கிடந்து நினைவில் ஓட்டிப் பார்க்கிறார். எங்கோ செல்ல நினைத்து, கடைசியில் வீட்டுக்கே திரும்ப வேண்டிய நிர்பந்தத்தில் ஒரு தற்காலிக மரணத்துக்குத் தயாராகிறார். இவ்வாறான தன் அனுபவங்களை எல்லாம் கவிதைக்குச் சொல்கிறார். எதிர்வினையாற்றாத கண்ணாடியில் புகாரளிப்பது போல. கவிதை மொழியிலும் சொற்களை வைத்து மாயாஜாலங்களைச் செய்யவில்லை. நவீனக் கவிதையில் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் தன்னுபவக் கவிதைகளின் தொடர்ச்சிதான் இந்தத் தொகுப்பு. தன் கவிதைக்கென ஒரு வடிவத்தை அவர் கைகொண்டுவிட்டார். அந்த வடிவத்துக்குள் தொடர்ந்து கவிதைகளை எழுதுவது எளிதாக இருக்கிறது. அதை மீற வேண்டிய முயற்சிகளையும் அய்யப்ப மாதவன் மேற்கொள்ள வேண்டியது அவசியம். நன்றி: தி இந்து, 18/10/2014.  

—-

தமிழர் திருமணம், பொன். இளங்கோவன், அருட்பா திருப்பணி மன்றம், கடலூர், விலை 25ரூ.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், பண்டைய தமிழர் திருமணம், ஆண்டாள் அருளிய பக்தித் திருமணம், சிலப்பதிகாரத்தில் திருமண காட்சிகள் போன்ற 13 தலைப்புகளில் பல்வேறு கருத்துக்கள் பயனுள்ள வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 15/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *