வர்ச்சுவல் அண்ட் விக்டோரியஸ் ஆல்வேஸ்
வர்ச்சுவஸ் அண்ட் விக்டோரியஸ் ஆல்வேஸ், சேவலாயா அமைப்பு. சேவாலயாவின் அகல் விளக்கு வர்ச்சுவஸ் அண்ட் விக்டோரியஸ் ஆல்வேஸ் என்ற தலைப்பில் அழகான ஆங்கில நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது சேலாலயா அமைப்பு. இன்றை குழந்தைகளுக்கும் அவசியமாகத் தேவைப்படுவத ஆன்றோர்களின் வாழ்க்கை முறைகளையும் சாதனைகளையும் பற்றி அறிந்து கொள்வதுதான். அந்த வகையில், இந்தச் சிறு நூலில் மகாகவி பாரதி, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தியின் சுருக்கமான வரலாற்றுக் கட்டுரைகளை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருக்கிற பலருக்கும் இந்தச் சிறு கட்டுரைகளால் பயனுண்டு. இன்றைக்குத் துப்புரவு இயக்கம் என்று அரசியல் ஆரவாரங்களோடு பெரிதாய் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய தேசப் பிதாவின் முக்கியமான கொள்கைகளுள் ஒன்றாக இதுவும் இருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திடமிருந்தும் சூழலில் இருந்தும் ஏராளமான பலன்களைப் பெறுகின்ற நாம், நம்மால் இயன்ற அளவுக்குப் பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்று தொடங்குகிற கட்டுரை ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. தன்னமலற்ற சேவைக்கு வழி காட்டியவர் பாபுஜி. சுவாமி விவேகானந்தர் பிறருக்கு உதவுவது என்னும் சொற்களையே விரும்ப மாட்டார். அவர்களுக்குப் பணி செய்வதே, தொண்டு செய்வதே கடவுளுடைய விருப்பம்.ஒரு நாய்க்கு ரொட்டித் துண்டைப் போடுவதானால்கூட, அதைக் கடவுளாக நினைத்து வழிபட முடியும். பெண்களுக்குச் சம உரிமை தருவது, வாழ்க்கை முழுவதும் கல்வி பயின்று கொண்டே இருப்பது என்று பல அவசியமான செய்திகளை, மகாகவி பாரதி, திருவள்ளுவர் பாடிய வரிகளின் துணையோடு விளக்கியிருப்பது நல்ல பணி. -சுப்ரபாலன். நன்றி: கல்கி, 30/11/2014.