வள்ளுவம் கூறும் வாழ்வியல்
வள்ளுவம் கூறும் வாழ்வியல், விதை வெளியீடு, ஈரோடு, விலை 275ரூ.
வள்ளுவம் கூறும் வாழ்வியல் சிந்தனைகளான அறம், அன்பு, அருள், தவம், பொருள் ஈட்டும் முறைகள், இன்சொல், ஈதல், கல்வி, அறிவு, ஊக்கம், முயற்சி, மன உறுதி, ஒழுக்கம், பண்பு, நட்பு, எண்ணங்களில் உயர்வு, நிலையற்ற வாழ்வின் தன்மை போன்றவற்றையும், அறத்துப்பால், பொருட்பாலில் இருந்து 100 குறள்களைத் தேர்ந்தெடுத்து, அதனோடு அறநூல்கள், இலக்கிய நூல்கள், சமய நூல்கள், அறிஞர்களின் பொன்மொழிகள், பழமொழிகளையும் இணைத்து எல்லா தரப்பினரும் கற்றறியும் வண்ணம் தொகுத்தளித்துள்ளார் பொறியாளர் தே.ஹெலினா. இது அவருடைய விரிந்து பரந்த இலக்கிய ஈடுபாட்டைக் காட்டுகிறது. இந்நூலை வாசிப்போர் வள்ளுவத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை செழுமைப்படுதிக்கொள்ளும் வழிமுறைகளைத் தெளிவுபட அறிந்து கொள்வர். நன்றி: தினத்தந்தி, 19/11/2013.
—-
அட்சய பாத்திரத்தில் அழுக்குப் படியாது, குழிபிறை, வீ.கே. கஸ்தூரிநாதன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 50ரூ.
அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் மையமாக வைத்து, வித்தியாசமான தலைப்பில் எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பாகும்.
எல்லாம் தெரிந்தவள் என்ற சிறுகதை தன்னை புகழ்ச்சியாக நினைத்துக் கொள்ளபவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு கதையும் ஒரு செய்தியை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 19/11/2013.