மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், பக். 152, விலை 125ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/meinigari.html முதன்முறையாக, தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெறும் கதை சூழலை கொண்ட நாவல் என்ற அறிமுகத்தோடு, இந்த நூல் பரிச்சயமாகிறது. ஆங்கில சொற்களுக்கு தமிழில் பெயர் சூட்டுதல் ஒரு கலை. ஆசிரியருக்கு அது கைவரப் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி படத் தொகுப்பாளர், டெரன்ஸ் பாலின் அனுபவங்களில் கதை நாயகனும், தன் அனுபவங்களைக் காட்சித் தொகுப்பாக ஆவணப்படுத்தி வைத்திருக்கிறான். இரண்டு ஆண்டுகளாக சேகரித்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முக்கிய நிகழ்வுகளுக்கு, அதற்கான சூழலையும், காரணத்தையும், ஒலி அமைப்பில் சேர்க்கிறான். கதை நகர்கிறது. புதிய களத்தில் பயணிப்பதால், துவக்கத்திலேயே, இந்த நூல், வித்தியாசத்தோடு அறிமுகமாகிறது. முடிவு வரை அதன் ஈர்ப்பு குறையாமல் அழைத்து செல்லப்பட்டிருக்கிறது. வாசகனின் பார்வையில், வார்த்தை பிடிமானங்கள் நழுவும், ஆனால் வரவேற்க வேண்டிய நாவல். -சுரேஷ். நன்றி: தினமலர், 04/01/2015.  

—-

ஞானப்பொக்கிஷம், விகடன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ.

இந்நூலில் இடம் பெற்றுள்ள, மிகவும் அரிதான 46 புத்தகங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன் பதிப்பிக்கப்பட்டவை. அப்புத்தகங்களின் விவரங்களையும், அவை பதிப்பிக்கப்பட்ட முறையையும், அவை வெளிக்கொண்டு வர முயற்சி எடுத்தவர்களையும் பற்றி சில விவரங்களையும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பழம் பெரும் களஞ்சியங்களான ஆசாரக்கோவை, அறநெறிச்சாரம், நல்வழி, திருவருட்பா, விதுரநீதி, கந்தபுராணம், கல்லாடம், விநோத ரச மஞ்சரி, பன்னூற்றிரட்டு போன்ற பல நூல்களின் ஞானப்பொக்கிஷங்களை, காலாகாலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களை, உண்மைகளை எளிய நடையில் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் பி.என். பரசுராமன். அவரது தேடல் வியப்புக்கும், பாராட்டுக்கும் உரியது. நன்றி: தினத்தந்தி, 24/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *